actress and comedian Aranthangi Nisha Starts boutique shop | Aranthangi Nisha: தமிழ் புத்தாண்டில் புதிதாக தொழில் தொடங்கிய அறந்தாங்கி நிஷா


நடிகையும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான அறந்தாங்கி நிஷா புதிதாக தொழில் ஒன்றை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த நிஷா 2015 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியான கலக்கப் போவது யாரு-வில் பங்கேற்று ரன்னர் அப் ஆனார். தொடர்ந்து சகல vs ரகள, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி, பிக்பாஸ் சீசன் 4, காமெடி ராஜா கலக்கல் ராணி, பிக்பாஸ் ஜோடிகள், ஸ்டார் கிட்ஸ் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் தோன்றினார். 
சின்னத்திரையில் தனக்கென தனியிடம் பிடித்த அறந்தாங்கி நிஷா, 2018 ஆம் ஆண்டு வெளியான மாரி 2 படம் மூலம் நடிகையாக அறிமுகமானா.ர் தொடர்ந்து இரும்புத்திரை, கோலமாவு கோகிலா, சீமராஜா, ஆண் தேவதை, கலகலப்பு 2, திருச்சிற்றம்பலம், ஜெயிலர் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். நிஷா 800க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படியான நிலையில் சினிமா பிரபலங்கள் பிற துறைகளில் தொழில் தொடங்குவது போல நிஷாவும் கால் பதித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், “அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். நான் எப்பவும் பெண் தொழில் முனைவோரை உத்வேகம் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். அப்படியாக என்னையும் தொழில் சார்ந்து நிறைய பேர் உத்வேகம் அளித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள். நாங்க இருக்கோம் என ஆதரவு தெரிவித்து இருக்கிறீர்கள். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் சின்னதா ஒரு தொழில் தொடங்கலாம் என முடிவெடுத்துள்ளேன். நிஷா பேஷன் என்ற பெயரில் ஆடையகம் ஒன்றை தொடங்கியுள்ளேன். ரொம்ப ரொம்ப சின்னதா என் வீட்டுக்கு அருகிலேயே தொடங்கியிருக்கிறேன். இதனை ஆன்லைன் மற்றும் நேரடியாக பெறும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கண்டிப்பாக அனைவரும் ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். அறந்தாங்கி நிஷாவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க:  Prithviraj Brother : பிரித்விராஜ் தெரியும்… அவரின் அண்ணனை தெரியுமா? வைரலாகும் க்ளிக்ஸ்

மேலும் காண

Source link