இயக்குநர் ஷங்கர் வீட்டு திருமணத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா பங்கேற்றுள்ள புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது. மணமகன் தருண் கார்த்திகேயன் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய திருமணத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திரைப்பிரபலங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, சுஹாசினி, மணிரத்னம், கார்த்தி, விஷால், அர்ஜூன், பாரதிராஜா, பாக்யராஜ், ஹரி, கே.எஸ்.ரவிகுமார், கீர்த்தி சுரேஷ், ஜீவா, சித்தார்த், பிரியா ஆனந்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆட்டம், பாட்டம் என அமர்க்களமாக நடந்த இந்த திருமணத்தின் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இணையத்தில் வைரலானது. திருமண விழாவில் கலந்து கொள்ள முடியாத பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக மணமக்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
#Sangeethavijay and @sumaharris Joins The Wedding Ceremony of Director @shanmughamshankar ‘s Daughter pic.twitter.com/89WZApCJLQ
— thooki_adichuruve_paathuko (@singlecva) April 15, 2024
இப்படியான நிலையில் இந்த திருமணத்தில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா கலந்து கொண்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது. அவர் இசையமைப்பாளர் சுமாவுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அதற்கு காரணம் சங்கீதாவை பொதுவெளியில் பார்த்து நீண்ட காலமாகி விட்டது. குறிப்பாக கொரோனா தொற்றுக்கு முன்னதாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யுடன் அவர் கலந்து கொண்டார். அதன்பிறகு சங்கீதாவை எங்கேயும் பார்க்க முடியவில்லை.
அவர் தன் மகன், மகள் படிப்புக்காக வெளிநாட்டில் இருக்கிறார் என தகவல் வெளியானது. மறுபுறம் சங்கீதாவும் விஜய்யும் பிரிந்து விட்டதாக தகவல் பரவியது. இதனால் என்ன நடக்கிறது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி போயினர். அவர் தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் விஜய் வெளிநாட்டில் கோட் படத்துக்காக ஷூட்டிங் சென்றிருப்பதால் சங்கீதா மட்டும் தனியாக இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதுவும் பலத்த சந்தேகங்களை கிளப்பியுள்ளது. உண்மையில் விஜய்யும், சங்கீதாவும் பிரிந்து விட்டார்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பின் பொதுவெளியில் தலைகாட்டிய சங்கீதாவை கண்டு விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் காண