ABP-CVoter Opinion Poll: வடக்கில் பாஜகவ அடிச்சிக்க ஆளே இல்லையா? காங்கிரஸ் நிலை என்ன? கருத்துக்கணிப்பில் தகவல்

நாட்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19ஆம் தேதியுடன் தொடங்குகிறது. கடந்த முறை போன்று இந்த முறையும் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு:

முதற்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் 102 தொகுதிகளுக்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முந்தைய கடைசி கருத்துக்கணிப்பு முடிவுகள் கடந்த 14ஆம் தேதியில் இருந்து வெளியிடப்பட்டு வருகிறது.

ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன.

இந்த நிலையில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக கருதப்படும் பீகாருக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பீகாரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 50.8 சதவிகித வாக்குகளை பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக:

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 39.9 சதவிகித வாக்குகளை பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொகுதிகளை பொறுத்தவரையில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய கூட்டணி 33 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. 7 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் தனித்து களமிறங்கும் பாஜக 58.0 சதவிகித வாக்குகளை பெற்று 7 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி – காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 34.9 சதவிகித வாக்குகளை பெறும் என கூறப்பட்டுள்ளது. டெல்லியில் போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் இந்தியா தோல்வி தழுவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் மத்திய பிரதேசத்தில் 53 சதவிகித வாக்குகளை பாஜகவும் 43 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தொகுதிகளை பொறுத்தவரையில், மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளில் 28 இடங்களை பாஜக கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன?

ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் கருத்துக்கணிப்புகளின்படி, சத்தீஸ்கரில் 49.8 சதவிகித வாக்குகளை பாஜக பெறும் என்றும் 44.4 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சத்தீஸ்கரில் உள்ள 11  தொகுதிகளில் பாஜக 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

ஹரியானாவில் 53 வாக்குகளை பாஜக பெறும் என்றும் 37.6 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 தொகுதிகளில் 9 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும் 1 தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Source link