ABP Cvoter Opinion Poll: உபி, பிகாரில் மாஸ் கட்டிய பாஜக.. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி

மக்களவை தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் தொடங்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. அரசியல் களம் சூடிபிடித்து வரும் நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து நாடு முழுவதும் எடுத்த தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு இன்னும் 25 நாள்கள் கூட இல்லாத நிலையில், ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் இணைந்து எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது.

கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

குஜராத், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கேரளா, லடாக், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. அதை தொடர்ந்து, உத்தர பிரதேசம், தெலங்கானா, பிகார், பஞ்சாப், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எடுத்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 74 தொகுதிகளை பாஜக கூட்டணி கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பிகார், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும்பாலான தொகுதிகளை பாஜக வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் உள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளிலும் ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளில் 12 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, கர்நாடகாவில் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 23இல் பாஜக கூட்டணி  வெற்றுபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் INDIA கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்ற பெற வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டுள்ளது. பிகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய இந்தியா கூட்டணி 8 வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டில் 2 தொகுதிகளிலும் கர்நாடகாவில் 5 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் பாஜக 4 தொகுதிகளிலும் பிஆர்எஸ் 3 தொகுதிகளிலும் ஏஐஎம்ஐஎம் ஒரு தொகுதியில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.

வடமாநிலங்களில் ஆதிக்கத்தை தொடரும் பாஜக:

தமிழ்நாட்டில் திமுக தலைமையில் தேர்தலை சந்திக்கும் INDIA கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல, கேரளாவில் 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை INDIA கூட்டணியில் இடம்பெற்றாலும் கேரளாவில் இவை தனித்தனியே போட்டியிடுகின்றன.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் INDIA கூட்டணி 3 தொகுதிகளிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட லடாக் யூனியல் பிரதேசத்தில் பாஜக வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 10ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. margin of error is +/- 5%)

Source link