குளித்தலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ரயில் தற்கொலை.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கோட்டமேட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவருக்கும் குளித்தலை அருகே வதியத்தை சேர்ந்த  கமலா  என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரு பெண் குழந்தைகள் உள்ளனர். எலக்ட்ரீசியனான ஆனந்த குமார் அடிக்கடி மது அருந்தி வந்ததால், இவருக்கும் கமலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனையில் ஆனந்தகுமார் கமலாவை தாக்கியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த கமலா இரவு வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வீட்டை விட்டு வெளியே சென்ற வரை அவரது குடும்பத்தினர் தேடியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை குளித்தலை ரயில் நிலையம் அருகே அவ்வழியாக வந்த சரக்கு ரயில் முன்பாக கமலா பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கமலா இறந்தது குறித்து தகவல் அறிந்த அவரது அதே ஊரைச் சேர்ந்த உறவினர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் ஆனந்த் குமாரின் உறவினர்களுக்கும் கமலாவின் உறவினர்களுக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதை தவிர்க்க குளித்தலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இறந்த பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் கடந்த ஒன்றை வருடமாக குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தகுமார் கமலாவை அடித்து துன்புறுத்தியதாகவும், மேலும் அவரது தற்கொலையில் எங்களுக்கு சந்தேகம் உள்ளதாகவும், ஒருவேளை கமலாவை ஆனந்த குமாரை கொலை செய்து இருக்கலாம் எனவும் திருமணம் ஆகி 7 வருடங்கள் கூட முடியாததால் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பெண்ணின் தரப்பைச் சேர்ந்த உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை – 600 028.
தொலைபேசி எண் – +91 44 2464 0050,   +91 44 2464 0060

Source link

Latest News

View All

1. Современные терапевтические схемы позволяют проводить детокс более контролируемо, но эффективность зависит от исходного состояния организма. Если человек начал пить много…

2. Помощь может включать консультацию, детоксикацию, стационар и дальнейшее сопровождение по показаниям. Получить больше информации – [url=https://vyvod-iz-zapoya-krasnodar3.ru/]вывод из запоя вызов на…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed