Uttar Pradesh: உத்தரபிரதேசத்தில் குடும்பமாக தூங்க சென்ற 7 பேரில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உத்தரபிரதேசத்தில் 5 குழந்தைகள் பலி:
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தனர். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: Crime: நாட்டையே உலுக்கிய கொடூரம்! பெற்ற குழந்தையை கொடூரமாக கொன்ற தாய் – சி.இ.ஓ. சிக்கியது எப்படி?
5 சடலங்கள் கண்டெடுப்பு:
ரஹீசுதின் என்பவருக்கு சொந்தமான வீட்டில் அவரது மனைவி, 3 பிள்ளைகள், உறவினர்களின் பிள்ளைகள் 2 பேர் மற்றும் கணவரின் சகோதரர் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை இரவு உறங்கச் சென்றுள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை வரையிலும் வீட்டின் கதவின் திறக்கப்படாததால் அக்கம்பக்கத்தினர் சந்தேகமடைந்துள்ளனர். இதனால், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், ரஹீசுதினின் பிள்ளைகள் 3 பேர் மற்றும் அவரது உறவினரின் பிள்ளைகள் 2 பேர் என மொத்தம் 5 பேரும் உயிரிழந்து கிடந்துள்ளனர். ரஹீசுதினின் மனைவி மற்றும் சகோதரர் ஆபத்தான நிலையில் மயக்க கிடக்க, அவர்களை மிட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 
இதையும் படிங்க: Crime: சென்னையில் பயங்கரம்..! வேறொருவருடன் பைக்கில் சென்ற மனைவி.. நடுரோட்டில் சரமாரியாக வெட்டிய கணவன்
நிலக்கரியால் வந்த வினை:
இதனிடையே, 5 குழந்தைகள் பலியான சம்பவம் தொடர்பாக தகவலறிந்த, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குன்வர் அனுபம் சிங் உள்ளிட்ட போலீசாருடன்,  நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர். அதன்படி, வீட்டில் உறங்க சென்ற அந்த குடும்பத்தினர் குளிருக்கு இதமாக இருப்பதற்காக நிலக்கரியை கொண்டு நெருப்பு மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். அப்போது, வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல் என அனைத்தும் மூடப்பட்டு இருந்துள்ளது. இந்த சூழலில் எரிக்கப்பட்ட நிலக்கரியில் இருந்து உருவான புகை வெளியேற முடியாமல், வீடு முழுவதும் நிறைந்துள்ளது. இதனால், வீட்டிற்குள் ஆக்சிஜன் அளவு குறைந்து, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்த அனைவரும் மயக்கமடைந்துள்ளனர். பல மணி நேரம் இதே நிலை நீடித்ததில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் சோனம் (19), வாரிஸ் (17), மெஹக் (16), ஜைத் (15) மற்றும் மஹிர் (12) என அடையாளம் காணப்பட்டுள்ளது. நிலக்கரியை எரிக்கும்போது கார்பன் – டை – ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற ஆபத்தான வாயுக்களை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்ய தடுத்த கணவர்! கொடூரமாக கொலை செய்த மனைவி – பீகாரில் ஷாக்!
 
 
 

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed