குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், ”தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது

குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த திருத்தச் சட்டம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும்.

இந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31 தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்தச் சட்டத்துக்கான விதிகளை மத்திய அரசு இன்று (11.03.2024) அறிவித்துள்ளது. குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறை முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

முதலமைச்சர் கண்டனம்:

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள விமர்சன பதிவில், ”குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் – இனத்தால் வேறுபடுத்தும் பிளவுவாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழரையும் வஞ்சிக்கும் குடியுரிமை சட்டத் திருத்ததை இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை தி.மு.க.  உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன.

ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது. மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க. திராவிட முன்னேற்றக் கழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாதுகாக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் – 2019-ஐ, இரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடுபடாமல் போன நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…
Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…
Нужен кейтеринг на мероприятие? https://kejtering-moskva.ru с доставкой и обслуживанием мероприятий любого масштаба. Фуршеты, банкеты, кофе-брейки, корпоративные праздники и частные события.…
Кейтеринговый банкет? https://furshetnye-nabory-s-dostavkoi.ru удобное решение для корпоратива, дня рождения, свадьбы или делового события. Выбирайте готовое меню или соберите собственный вариант…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

‘தம்பி நீ எழுந்தா தான் சண்டை வருது, 8-ம் தேதி வரைக்கும் பேசாதீங்க.!’- ஆதவ் அர்ஜுனா குறித்து பிரேமலதா | premalatha vijaykanth slams aadha arjuna | ACTPnews.com

‘இது சட்டமன்றமா… இல்ல சண்டை மன்றமா?’ – திடீரென கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த் |“Is This a Legislative Assembly or a Fight House?” – Premalatha Vijayakanth Erupts Suddenly | ACTPnews.com

இமயமலை உருகினால் 200 கோடி பேருக்கு ஆபத்து – நேபாள அமைச்சர்|‘What Melts in Himalayas Rises in Sea’: Nepal FM’s Big Warning | ACTPnews.com

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி | ACTPnews.com

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?’ விஜய் – மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார் | Kazhugar updates on PTR and TVK, BJP politics | ACTPnews.com

roulette schwarz weiss Feel free to visit my web page: online casino 50 euro eps – https://wellbeings.ae/,