தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?' விஜய் - மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார் | Kazhugar updates on PTR and TVK, BJP politics


கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி, தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டை சுமூகமாக நடத்தி முடிக்க, முதல்வர் விஜய்யை மத்திய மாண்புமிகு ஒருவர் ரகசியமாக சந்தித்ததாக சொல்கிறார்கள் முதல்வர் அலுவலகப் புள்ளிகள்.

விஜய் - அமித்ஷா

விஜய் – அமித்ஷா

‘அமித் ஷா ஜி-க்கு உங்களை பழிவாங்கும் நோக்கமெல்லாம் கிடையாது. கூட்டணியிலிருந்து காங்கிரஸை நீங்கள் கழற்றிவிட்டாலே போதும்’ எனப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் அந்த மத்திய மாண்புமிகு. ‘நிதி விவகாரங்களில் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும்’ என முதல்வரும் பதிலுக்கு கேட்க, அதற்கும் க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். அதன்பிறகு, தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க சென்னை வந்த அமித் ஷாவை சந்தித்திருக்கிறார் முதல்வர் விஜய். பரஸ்பரம் நட்பு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

‘முந்தைய அரசு போல ஒன்றிய அரசை சீண்டுவது எங்கள் நோக்கமல்ல.. ஒற்றுமையாக செயல்படுவோம்’ என முதல்வர் விருப்பம் தெரிவிக்க, ‘முதல்வர் விஜய்யின் அணுகுமுறை நன்றாக இருக்கிறதே!’ என மத்திய மாண்புமிகுக்களிடம் பகிர்ந்திருக்கிறார் அமித் ஷா. எனவே இருதரப்புக்கும் இடையேயான நெருக்கம் அதிகரிக்கவே வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.!



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Если вам требуется качественный [url=https://remont-dvig124.ru]Ремонт двигателей[/url], обращайтесь к профессионалам. Так обеспечивается длительная и стабильная эксплуатация транспортного средства.

  2. Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг мультимедийных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. На первых позициях…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed