கவின் ச


வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்று கடந்த 14 நாட்களாகக் காணாமல் போன ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 7 மீனவர்களைத் தேடும் பணியை எக்காரணம் கொண்டும் கைவிடக் கூடாது எனப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எம்.பி., அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள விரிவான அறிக்கை பின்வருமாறு:

14 நாட்களாக நீடிக்கும் மர்மம் – கவலையில் குடும்பங்கள்

ஆந்திரப் பிரதேசம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் ஓடலரேவு கடற்கரையிலிருந்து கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி வங்கக்கடலுக்கு சூறை மீன்பிடிப்புக்காக சென்ற 7 மீனவர்கள் காணாமல் போய், 14 நாள்களாகும் நிலையில், இதுவரை அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களைத் தேடும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டிய நிலையில், தேடும் பணிகள் கைவிடப்படவுள்ளதாக வெளியாகும் செய்திகள் கவலையளிக்கின்றன.

ஓடலரேவு பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஓடலரேவு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சூறை மீன்பிடிக்கச் சென்றனர். கர்ரி ராமுடு, கே. ராமகிருஷ்ணா, எஸ். தாத்தாராவ், ஏசுதாசு, பலேபு சாந்தராவ், கொல்லட்டி ஸ்ரீநிவாஸ், சதீஷ் ஆகிய 7 மீனவர்களும் கடந்த 10 அல்லது 11 ஆம் தேதி துறைமுகம் திரும்பியிருக்க வேண்டும். ஆனால், கடைசியாக கடந்த 7&8ஆம் தேதி குடும்பத்தினரைத் தொடர்பு கொண்ட அவர்களை அதன்பின் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களின் படகு ஒடிஷா அல்லது மேற்கு வங்காள கடல்பகுதிக்கு காற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படைக்கு சொந்தமான இரு கப்பல்கள், கடலோரக் காவல் படைக்கு சொந்தமான 5 கப்பல்கள், விமானப் படைக்கு சொந்தமான இரு ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அவர்கள் காணாமல் போனதாக கருதப்படும் பகுதியில் இருந்து 300 கடல் மைல் சுற்றளவில் தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், ஒடிஷா மாநிலம் பாரதீப் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களின் உதவியும் கோரப்பட்டிருக்கிறது. ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உதவிகள் கோரப்பட்டுள்ளன.

கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து மேற்கொள்ளும் தேடுதல் வேட்டையை குறை சொல்ல முடியாது. ஆனால், இரு வாரங்களாகியும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், இன்னும் ஓரிரு நாள்களில் தேடும் பணிகளை நிறுத்த அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் கவலை அடைந்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்களிடம் 1000 லிட்டர் டீசலும், 20 நாள்களுக்குத் தேவையான உணவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. கடுமையான காற்று காரணமாக அவர்கள் வெகு தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால், தேடுதல் தொலையை சற்று அதிகரித்து பணிகளை தீவிரப்படுத்தினால், காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து விடலாம். காணாமல் போன மீனவர்களில் மூவருக்குக் நீச்சல் கூட தெரியாது என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தேடும் பணிகள் கைவிடப்பட்டால், இதுநாள் வரை மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் வீணாகி விடும். எனவே, காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் வரை தேடுதல் பணிகளை நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திர அரசையும், கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைகளை கேட்டுக் கொள்கிறேன். காணாமல் போன மீனவர்கள் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவு, நிதி ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும்.

ஆசிரியர் பற்றிகவின் சகவின் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சமயம் தமிழ் இணையதளத்தில் டிஜிட்டல் கன்டென்ட் புரொடியூசர் மற்றும் வீடியோ புரொடியூசராக பணியாற்றி வருகிறார். இங்கு அரசியல், தமிழகம் மற்றும் தேசிய நிகழ்வுகள், பொதுமக்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த செய்திகளை வழங்கி வருகிறார். ஊடகத்துறையில் 3 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைக் கழகத்தில் முதுகலை தமிழ் பட்டம் பெற்றார். ஊடகத் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக, நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் 2023 ஆம் ஆண்டு ஊடகவியலாளராக தனது பணியை தொடங்கினார். அங்கு, ப்ரோடொக்‌ஷன் கன்ட்ரோல் ரூமில் பணியாற்றி உள்ளார். பிறகு ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர், சப் எடிட்டராக மற்றும் புரோகிராம் புரொடியூசராக பணியாற்றி உள்ளார். அங்கு அரசியல், மாவட்டம், சினிமா, விளையாட்டு தொடர்பான செய்திகளையும் வழங்கி வந்தார். தற்போது சமயம் தமிழில் தமிழக அரசியல், தேசிய நிகழ்வுகள், பொதுமக்கள் பிரச்சினைகள், அரசு திட்டங்கள், ட்ரெண்டிங்கான உலக செய்திகளை வழங்கி வருகிறார். மேலும், சமயம் தமிழ் யூடியூப் சேனலில் அரசியல் தொடர்பான செய்திகளை சுவாரஸ்யமான முறையில் வழங்கி கொண்டிருக்கிறார்.
Coverage Specialization: தமிழக அரசியல், தேசிய நிகழ்வுகள், பொதுமக்கள் பிரச்சினைகள்.அரசு திட்டங்கள், சுவராஸ்யமான செய்திகள், உலக செய்திகள்
மேலும் படிக்க



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed