3 ஆண்டுகளுக்கு முன்பு 13 வாக்குறுதிகள்; ஒன்றை கூட முதல்வர் நிறைவேற்றவில்லை – அன்புமணி

நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆரணி நாடாளுமன்ற  தொகுதியில் போட்டியிடும் பாமக  வேட்பாளர் கணேஷ்குமாரை  ஆதரித்து, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி  செய்யாறில் பிரச்சாரம் செய்தார். பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: மிகச்சிறப்பாக பணியாற்றியவர், மண்ணுக்கும், மக்களுக்கும், விவசாயத்திற்கும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுப்பவர், நன்கு படித்தவர், முனைவர் கணேஷ் குமாருக்கு  ஆதரவளித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன். இவரைவிட தகுதியான வேட்பாளர் உங்களுக்கு கிடைக்கமாட்டார். இனமனக்காவலர், மருத்துவர் அய்யா உங்களுக்கான தகுதியான வேட்பாளரை அறிவித்துள்ளார். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய மாவட்டம் முதலாவது பெரிய மாவட்டம் திண்டுக்கல். இந்த மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை இருக்கிறது. கலெக்டர்  அலுவலகத்திற்கு செல்ல 220 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். மருத்துவர் அய்யா நிர்வாகத்திற்கு ஏதுவாக மாவட்டத்தை பிரிக்க கோரிக்கை வைத்தார். 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தை தலா 4 தொகுதிகளாக பிரிக்கலாம். அது தான் நிர்வாகத்திற்கு ஏதுவாக இருக்கும்.

அமைச்சர் எ.வ.வேலுவை மீறி மாவட்டதில் எதுவும் நடக்காது

இந்த மாவட்டத்தை பிரிக்காமல் பார்த்துக்கொள்வது அமைச்சர் எ .வ.வேலு. இம்மாவட்டத்தின் குட்டி மன்னர். எ.வ.வேலுவை மீறி இந்த மாவட்டத்தில் எதுவும் நடக்காது. அவருக்கு வேண்டியவர் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தாசில்தார், கட்சிக்காரர் என இருக்கிறார்கள். அவரை மீறி எதுவும் நடக்காது. இவ்வுளவு அதிகாரம் வைத்துள்ள அமைச்சர், மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு என்ன செய்தார் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நீங்கள் செய்தது என்ன. தேர்தல் நேரத்தில் இந்த மாவட்டத்திற்கு வருகை தந்த மு.க ஸ்டாலின், இந்த மாவட்டத்திற்கு என 13 வாக்குறுதி அளித்தார். காவிரி குடிநீர் திட்டம், நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என கூறினார், இதனை அண்ணா காலத்தில் இருந்து கூறி வருகிறார்கள். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா, எடப்பாடி ஆகியோர் இதனை கூறினார்கள். இன்னும் எவ்வுளவு காலம் தான் இதனையே கூறுவீர்கள்? எதற்கு ஆட்சி நடத்துகிறீர்கள்? மாவட்ட அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் என்று கூறினார்கள், நடந்ததா? இல்லை. திருவண்ணாமலையில் கால்நடை மருத்துவக்கல்லூரி, நெல் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்றார்கள், வந்ததா  நாமம். ஆரணியில் பட்டு ஜவுளி பூங்கா, வந்துச்சா வரல, ஆரணி, செய்யாறில் புதிய பேருந்து நிலையம், செய்யாறில் இஎஸ்ஐ மருத்துவமனை இன்னும் வரவில்லை,  வந்தவாசியில் பாலிடெக்னிக் கல்லூரி, கீழ்பென்னாத்தூரில் தொழிற்பயிற்சி நிலையம்,

திமுக 3 ஆண்டுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

செங்கம், கலசப்பாக்கம் பகுதியில் நறுமண தொழிற்சாலை, கலசப்பாக்கம், செய்யாறில் உணவு குளிர்பதன கிடங்குகள், தர்மநல்லூர் தானியக்கிடங்கு, மேல்செங்கத்தில் அரசு வேளாண்மை கல்லூரி, செய்யாறு – தென்பெண்ணையாறு இணைப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என கூறினார் நடந்ததா? நாங்கள் செய்யாறு – தென்பெண்ணையாற்றை இணைக்க போராடி வருகிறோம். சாத்தனூர் குடிநீர் திட்டம் கடலாடி கிராமத்திற்கு ஏற்படுத்தப்படும். இப்படியான 13 வாக்குறுதிகளை 3 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கொடுத்தது. இதில் ஒன்றை கூட முதல்வர்  ஸ்டாலின் நிறைவேற்றவில்லை. பிறகு திமுகவுக்கு நீங்கள் ஏன் வாக்களிக்க வேண்டும். நம்பிக்கை வைத்து திமுகவுக்கு வாக்களித்து ஆட்சியை கொண்டு வந்தீர்கள். இங்குள்ள வியாபாரியை அமைச்சராக கொண்டு வந்தீர்கள். நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையை கையில் வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கிறார்கள். தமிழ்நாட்டை அடுத்த 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய தொலைநோக்கு திட்டத்தை நிறைவேற்றும் புத்திசாலியா அவர் காசு சம்பாதிப்பதில் பிஎச்டி வாங்கியுள்ளார் அமைச்சர். எங்களின் வேட்பாளர் எஞ்சினியரிங் படிப்பில் பிஎச்டி வாங்கி இருக்கிறார். இத்தொகுதியில் திமுக வேட்பாளர் அமைச்சரின் அடிமையாக இருப்பார். அமைச்சர் எழுந்துரு என்றால் எழுந்திருப்பார், உட்காரு என்றால் உட்காருவார்.

அதிகாரமுள்ள அமைச்சர் தொகுதிக்கு தமிழ்நாட்டையே அழித்து நாசமாக்கிவிட்டீர்கள்.

இவர் உங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு வாக்களியுங்கள். கணேஷ் குமார் உலக முழுவதும் பல நாடுகளுக்கு சென்று ஐநா மன்றத்திற்கு சென்று பேசியவர். நான் திமுக வேட்பாளரை குறைகூறவில்லை. அமைச்சர் அப்படிதான் நடத்துவார். அதிகாரமுள்ள அமைச்சர் தொகுதிக்கு கொண்டு வந்தது என்ன தமிழ்நாட்டையே அழித்து நாசமாக்கிவிட்டீர்கள். தமிழ்நாட்டிலேயே அதிகம் போதைப்பொருள் பயன்படுத்தப்படும் மாவட்டத்தில் திருவண்ணாமலை தான் முதன்மையானது. ஆந்திராவில் இருந்து நேரடியாக வந்து ஒவ்வொரு கிராமத்திலும் நுழைகிறது. இதனைக்கண்டு நான் மனமுடைந்துவிட்டேன். போதையில் இளைஞர்கள் உருகிக் கிடக்கிறார்கள். இதனை மக்கள் நியாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் 500, 1000 என காந்தி நோட்டை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். சாராயத்தை கொடுத்து 3 தலைமுறைகளை அழித்து விட்டார்கள். தமிழ்நாட்டில் போதை இல்லாத, மது இல்லாத நிலையை இளைஞர்கள் எதிர்கொள்ள இயலாமல் திணறுகின்றனர். போதைப்பொருளில் எந்தவிதமான வாசனையும் வாராது. நீங்கள் 2 ஆண்டு கடந்து தான் அதனை கண்டறிவீர்கள். காலம் கடந்தபின் பாதிக்கப்பட்டவனை மீட்டெடுக்க முடியாது. அமெரிக்காவில் கிடைக்கும் போதைப்பொருள் இங்கு கிடைக்கிறது. இங்குள்ள அமைச்சர் எதற்கு பொறுப்பில் இருக்கிறார் எதற்காக நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அன்புமனி பேசினார்.

Source link