Month: February 2024

• Legend Saravanan said on his social media that when will the second film be shooting

Legend Saravanan said on his social media that when will the second film be shooting

Legend Saravanan: லெஜண்ட் சரவணன் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதை அவரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
லெஜண்ட் சரவணன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா மற்றும் தமன்னாவுடன் இணைந்து விளம்பரம் ஒன்றில் அதிரடியாக எண்ட்ரி கொடுத்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியவர் “லெஜண்ட் சரவணன்”.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்களை இயக்கி வந்த இரட்டை இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி தான் இப்படத்தை இயக்கி உள்ளார். மேலும், ஹாரிஸ் ஜெராஜ் இசையமைத்த நிலையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்தார்.
இந்த படத்தில் சரவணணுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார். மேலும், விவேக், ரோபோ சங்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.  இந்த படம் சுமார் 5 மொழிகளில்  2500 தியேட்டர்களில் படம் வெளியாகி ரசிகர்கள் சரவணன் அப்படி என்ன செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்காகவே தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.
ஏப்ரலில் படப்பிடிப்பு:
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், லெஜண்ட் சரவணனின் நடிப்பு குறித்து சிலர் கிண்டலாகவும், சிலர் அவரின் துணிச்சலான முயற்சியை பாராட்டியும் உள்ளனர். திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில், ஓடிடியிலும் வெளியாகி அதிகமாக வியூஸ்களை பெற்றுள்ளது.

உறவினர் திருமண விழாவில் சொந்த பந்தங்களுடன்…ஏப்ரலில் படப்பிடிப்பு ஆரம்பம்…#legend #Anbanavan#legendsaravanan pic.twitter.com/dZbWhtYQFN
— Legend Saravanan (@yoursthelegend) February 23, 2024

இந்த நிலையில், அடுத்ததாக எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாசு உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜெண்ட் சரவணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்த படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வரும் நிலையில், படத்தின் சூட்டிங் குறித்து லெஜெண்ட் சரவணன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் தன்னுடைய  அடுத்த படத்தின் சூட்டிங் தொடங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார். எனவே, விரைவில் இந்த படம் குறத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், அதே பதிவில் உறவினர் திருமண விழாவில் உறவினர்களுடன் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
இந்த திருமண விழாவிற்கு கோட் சூட்டில் ஸ்டைலிஷாக வந்து இறங்கி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.  தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த அனைவருடனும் புகைப்படம் எடுத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.  இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க
Ranam:G.O.A.T. பட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைபவ்காக வெங்கட் பிரபு வெளியிட்ட வீடியோ – என்ன காரணம்?

மேலும் காண

Source link

• மாசி மகம் தீர்த்தவாரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

மாசி மகம் தீர்த்தவாரி: புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரியில் நாளை மாசிமகம் தீர்த்தவாரி வைத்திக்குப்பம் கடற்கரை பகுதியில் நடக்கிறது.  புதுச்சேரி மாசிமகம் தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை உத்தரவு, மேலும் சிபிஎஸ்சி மற்றும் அரசு செய்முறைத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என கல்வி துறை தெரிவித்துள்ளது.

மாசிமகம் தீர்த்தவாரி

மாசிமகம் தீர்த்தவாரியையொட்டி மைலம் முருகர், தீவனூர் விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி, மணக்குள விநாயகர், வரதராஜ பெருமாள், வேதபுரீஸ்வரர், முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் உட்பட  100 க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து உற்சவர்கள் பங்கேற்க உள்ளனர். புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் , காலை 11 மணிக்கு

போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொது மக்களின் வசதிக்காகவும் நகரின் பிரதான சாலைகளில் நாளை காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சந்திப்பில் இருந்து ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. எனவே, காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு இசிஆரில் வரும் அனைத்து வகை வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

புதிய பஸ் நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னை இ.சி. ஆரில் செல்லும் பஸ்கள் அனைத்தும் வெங்கடசுப்பா சிலையில் வலதுபுறம் திரும்பி, மறைமலை அடிகள் சாலை வழியாக நெல்லிதோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜிவ் காந்தி சதுக்கம், சிவாஜி சிலை வழியாக சென்னை செல்ல வேண்டும்.

Source link

• DC VS MI WPL 2024: கடைசி பந்தில் சிக்ஸர்…டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!

DC VS MI WPL 2024: கடைசி பந்தில் சிக்ஸர்…டெல்லி கேபிட்டல்ஸை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!

ஐ.பி.எல் 2024:

இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், யு.பி.  ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

அந்த வகையில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதன்படி, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.  இதில் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ஷஃபாலி வர்மா மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், மெக் லானிங் உடன் ஜோடி சேர்ந்தார் ஆலிஸ் கேப்ஸி. இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள். இதில், மெக் லானிங் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் பறக்கவிட்டு மொத்தம் 31 ரன்கள் எடுத்து நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஆலிஸ் கேப்ஸியுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார். அந்த வகையில் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ஆலிஸ் கேப்ஸி. அந்தவகையில் மொத்தம் 53 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 75 ரன்களை குவித்தார். அதேபோல் மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இதனிடையே சதம் விளாசுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஆலிஸ் கேப்ஸி 75 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி:

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி  களம் இறங்கியது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹேலி மேத்யூஸ் மற்றும் யாஸ்திகா பாட்டியா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் ஹேலி மேத்யூஸ் டக் அவுட் முறையில் வெளியேற மறுபுறம் அதிராடியாக விளையாடினார் யாஸ்திகா பாட்டியா.

பின்னர் வந்த நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் 19 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க  யாஸ்திகா பாட்டியாவுடன் ஜோடி சேர்ந்தார் மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்.  இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அந்த வகையில் 45 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 57 ரன்களை குவித்தார். அப்போது அருந்ததி ரெட்டி வீசிய பந்தில் அவர் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஆட்டம் இறுதிகட்டத்தை எட்டியபோது 19 வது ஓவரின் 5வது பந்தில் அவுட் ஆனார் ஹர்மன்ப்ரீத் கவுர்.

கடைசி பந்தில் சிக்ஸர்:

𝙐𝙉𝘽𝙀𝙇𝙄𝙀𝙑𝘼𝘽𝙇𝙀!

5 off 1 needed and S Sajana seals the game with a MAXIMUM very first ball🤯💥

A final-over thriller in the very first game of #TATAWPL Season 1 🤩🔥

Scorecard 💻📱 https://t.co/GYk8lnVpA8#TATAWPL | #MIvDC pic.twitter.com/Lb6WUzeya0

— Women’s Premier League (WPL) (@wplt20) February 23, 2024

அப்போது ஒரு பந்தில் 5 ரன்கள் மும்பை அணிக்கு தேவை பட்டது. கடைசி ஓவரின் கடைசி பந்தை வீசினார் ஆலிஸ் கேப்ஸி. அப்போது களத்தில் நின்ற சஜீவன் சஜனா கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார். இவ்வாறாக மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Source link

• Madonna Sebastian Photos : ”காந்த கண்ணழகி..” நடிகை மடோன்னா செபாஸ்டியனின் கலக்கல் புகைப்படங்கள்!

Madonna Sebastian Photos : ”காந்த கண்ணழகி..” நடிகை மடோன்னா செபாஸ்டியனின் கலக்கல் புகைப்படங்கள்!

Madonna Sebastian Photos : ”காந்த கண்ணழகி..” நடிகை மடோன்னா செபாஸ்டியனின் கலக்கல் புகைப்படங்கள்!

Source link

• TVK: விஷமத்தனம்; நம்பாதீங்க: தமிழக வெற்றிக் கழகம் அவசர அறிவிப்பு

TVK: விஷமத்தனம்; நம்பாதீங்க: தமிழக வெற்றிக் கழகம் அவசர அறிவிப்பு

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு பொய் தகவல்கள் பரப்பட்டன. இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வச் செயலி வாயிலாக மட்டுமே உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், உறுப்பினர்கள் சேர்க்கைக்காகச் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் கடந்த 19ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளேன். கட்சியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில் அல்லது விஷமத்தனமாகப் பரப்பப்படும் செய்திகளைக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். .
தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல்கள் தொடர்ந்து வெளியாகி உள்ள நிலையில், அவர் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தனது கட்சி பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம்(Tamizhaga Vetri kazhagam) என்று அறிவித்தார். கட்சி பெயரில் எழுதுப் பிழை இருப்பதாக பலர் கருத்து தெரிவ்த்ததும் கட்சியின் பெயரினை, தமிழக வெற்றிக் கழகம் என மாற்றி அறிவித்தார்.
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சட்டசபைத் தேர்தல் நடைபெறும் 2026ம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார்.

நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் @actorvijay அவர்கள், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பதை, பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட தமது முதல் அறிக்கையிலேயே தெளிவுபடுத்தியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் @tvkvijayhq…
— N Anand (@BussyAnand) February 23, 2024

பனையூரில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பொறுப்பாளர்களுக்கு, “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப்பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கின்றேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு. சமஉரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி அளிக்கின்றேன்” என உறுதிமொழி எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் காண

Source link

• போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி- நிவாரணம் அறிவித்த பஞ்சாப் அரசு..

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி- நிவாரணம் அறிவித்த பஞ்சாப் அரசு..

ஹரியானா எல்லையில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிக்கு பஞ்சாப் அரசு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சுப்கரன் சிங்கின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது தங்கைக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ਖਨੌਰੀ ਬਾਰਡਰ ਤੇ ਕਿਸਾਨ ਅੰਦੋਲਨ ਦੌਰਾਨ ਸ਼ਹੀਦ ਹੋਏ ਨੌਜਵਾਨ ਸ਼ੁਭਕਰਨ ਸਿੰਘ ਦੇ ਪਰਿਵਰ ਨੂੰ ਪੰਜਾਬ ਸਰਕਾਰ ਵੱਲੋਂ 1 ਕਰੋੜ ਰੁਪਏ ਦੀ ਆਰਥਿਕ ਸਹਾਇਤਾ ਅਤੇ ਛੋਟੀ ਭੈਣ ਨੂੰ ਸਰਕਾਰੀ ਨੌਕਰੀ ਦਿੱਤੀ ਜਾਵੇਗੀ..ਦੋਸ਼ੀਆਂ ਵਿਰੁੱਧ ਬਣਦੀ ਕਾਨੂੰਨੀ ਕਾਰਵਾਈ ਕੀਤੀ ਜਾਵੇਗੀ..ਫਰਜ਼ ਨਿਭਾ ਰਹੇ ਹਾਂ..
— Bhagwant Mann (@BhagwantMann) February 23, 2024

வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் டெல்லியில் பதட்டமான சூழல் காணப்படுகிறது. w
நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் தான், ஹரியானா மாநிலம் கானௌரி எல்லையில் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் தடுக்க முயன்ற போலீசார் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.  இதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். போலீஸ் நடவடிக்கையின் போது தான் அவர் இறந்துவிட்டார் என்று அகில இந்திய கிசான் சபா குற்றம் சாட்டியுள்ளது. ஆனால்,  அதை ஹரியானா போலீசார் மறுத்துள்ளனர். விவசாயி உயிரிழந்த நிலையில், எல்லையில் அமர்ந்து தொடர்ந்து போராடுவோம் என்றும், டெல்லியை நோக்கி செல்லும் போராட்டம் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
எல்லையில் உள்ள தடுப்புகளை உடைக்கும் முயற்சியை முறியடிப்பதற்காக,  விவசாயிகள் மீது ஹரியானா காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. அப்போது தான் அந்த விவசாயி சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  விவசாயி யாரும் உயிரிழக்கவில்லை என ஹரியானா மாநில காவல்துறை விளக்கமளித்துள்ளது. ஆனால், விவசாயியின் உயிரிழப்பை கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த மான் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்றும் குற்றவாளி நிச்சயம் தண்டிக்கப்படுவார் என்றும் முதலமைச்சர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

மேலும் காண

Source link

• Tamil Nadu Revenue Department officials went on strike for the second day by boycotting work in salem – TNN

Tamil Nadu Revenue Department officials went on strike for the second day by boycotting work in salem – TNN

தமிழ்நாடு வருவாய்த் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், இதில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்கப் பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மேலாண்மைப் பணிக்கென சிறப்பு பணியிடங்கள் மற்றும் பேரிடர் மேலாண்மைப்பிரிவில் 31.03.2023 முதல் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை மீண்டும் வழங்கிட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும், அரசின் திட்டப்பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதைத் தவிர்த்து திட்டப் பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 13 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து 2 ஆம் கட்டமாக தங்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து பணிகளையும் புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து இன்று இரண்டாவது நாளாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வருவாய் துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் தமிழ்நாடு அரசு தங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி உடனடி தீர்வு காணவில்லை எனில் வரும் 27 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

போராட்டம் குறித்து தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி கூறுகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை தங்களுக்கு நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் காலி பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தால் அரசு அறிவிக்கும் புதிய திட்டங்கள் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் கூடுதல் பணி சுமை காரணமாக வருவாய் துறை அலுவலர்கள் மன உளைச்சலில் உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இம்மாதம் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் மேற்கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் காண

Source link

• Kiara Advani Photos : கோட் சூட்டில் அசத்தும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!

Kiara Advani Photos : கோட் சூட்டில் அசத்தும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!

Kiara Advani Photos : கோட் சூட்டில் அசத்தும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி!

Source link

• Tiruvannamalai | திருவண்ணாமலை

Tiruvannamalai | திருவண்ணாமலை

திருவண்ணாமலையில்  நின்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பிரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளரும் கரும்பு சங்கத்தின் மாநில துணை தலைவருமான பலராமன் கடந்த சிலநாட்களுக்கு முன்பு உயிரிழந்தார், அதனை தொடர்ந்து அவரின் உருவ படத்திற்கு இன்று சிபிஎம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினர்.
சிபிஎம் மாநில தலைவர் பாலகிருஷ்ணன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது;
மோடி அரசாங்கம் எப்படி ஒரு மோசமான அரசாங்கம் என்பதற்கு எடுத்துக்காட்டு தற்போது டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், இந்தப் போராட்டத்தை மத்திய அரசு எப்படி அணுகுவது என்பதை பார்த்தாலே மத்தியில் ஆளும் பாஜக  அரசு எப்படிப்பட்ட மோசமான அரசு என்பதை புரிந்து கொள்ளலாம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக டெல்லியில் போராடி விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என வாக்குறுதி அளித்துவிட்டு அதை இன்று வரை நிறைவேற்றவில்லை. தற்போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்கள் மீது ராணுவத்தை வைத்து விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கிறார்.

இதுவரை எந்த ஒரு நாட்டிலும் கடைப்பிடிக்காத வகையில் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுதல், சாலையில் ஆணியை அமைத்தல், துப்பாக்கி சூடுகள் நடத்தி இதுவரை இரண்டு விவசாயிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது போன்று ராணுவத்தை வைத்து போராட்டத்தை அடக்கிய நிலை எங்கும் பார்த்ததில்லை. இந்த நாட்டில் உள்ள விவசாயிகளையோ, உழைப்பாளிகளையோ, நடுத்தர மக்களை பற்றி கவலைப்படாமல் அவர்களுடைய வாழ்வை சீரழிக்கும் விதமாக ஆட்சி நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து நாடு தழுவிய கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும். விவசாயிகள் இந்தப் போராட்டத்தினால் பாரதிய ஜனதா கட்சி வட மாநிலங்களில் படு தோல்வி அடையும்.  வாக்கு எந்திரத்தில் மோசடி நடப்பதாக அனைத்து அரசியல் கட்சிகள் நினைப்பதால்தான் வாக்கு எந்திரம் வேண்டாம். மீண்டும் ஓட்டு சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.

பாஜக அரசு அதை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் வாக்கு எந்திரத்தை மட்டுமே நம்பி தேர்தலில் நிற்கிறது. அதனால் தான் 420 இடங்களில் பாஜக வெற்றி பெறுவோம் என கூறி வருகின்றனர். எதிரணிகளும் அங்கங்கே வெற்றி பெறுகிறார்கள் என்பதை காட்டுவதற்கு தான் இடங்களிலும் வாக்கு எந்திரங்களை மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, இளைஞர்களுக்கு இந்த மோடி அரசு எதுவுமே செய்யவில்லை. அதை வைத்து வாக்கு கேட்க முடியாது என்பதால் தான் தற்போது ராமரை வைத்து மோடி வாக்கு சேகரிக்கிறார். தற்போதைய தேர்தலில் ராமரைக் காட்டி பாஜக அரசு வெற்றி பெற முடியாது. ராமரை நம்பி மக்கள் மோடிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்த்த நிலையில் கடந்த காலங்களில் பல சட்டங்களுக்கு அதிமுக பாஜகவுடன் துணை நின்றது. தற்போது தங்கள் வெளியே வந்து விட்டதாக கூறினாலும் மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக கட்சி கலைந்து போய்விடும். செய்யார் சிப்காட் தொழிற்சாலையில் விரிவாக்கம் திட்டத்திற்கு விவசாயிகளின் முழுமையான ஒப்புதல் பெற்றால் மட்டுமே அவர்களது நிலத்தை எடுக்க வேண்டும். வாழ்வாதாரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு நிலங்களை எடுக்கக் கூடாது. ஒன்பது டோல்கேட் எடுக்க வேண்டுமென அரசிடம் பேசி உள்ளோம். வேளாண்துறைக்கு என தனியாக பட்ஜெட் வந்தவுடன் தான் வேளாண் துறையில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் அணுகுவற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் காண

Source link

• Congress has not declared any PM candidate says Shashi Tharoor in ABP Ideas of India summit

Congress has not declared any PM candidate says Shashi Tharoor in ABP Ideas of India summit

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2024 உச்சி மாநாடு, இன்று தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
”அடுத்த அரசை எதிர்க்கட்சிகள் கூட அமைக்கலாம்”
அந்த வகையில், உச்சி மாநாட்டின் முதல் நாளான இன்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் கலந்து கொண்டு பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசினார். அடுத்த மாதம், மக்களவை தேர்தல் தொடங்க உள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வியூகம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், “இன்னும் தேர்தல் வரவில்லை. அதனால் எதிர்கட்சிக்கு எவ்வளவு நேரம் இருக்கு என்று தெரியவில்லை.  எதிர்க்கட்சிகளை சாதாரணமாக எடை போட வேண்டாம். அடுத்த அரசை எதிர்க்கட்சிகள் கூட அமைக்கலாம்” என்றார்.
பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து பேசிய அவர், “45.4 சதவிகித இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. நீங்கள் இந்தியாவின் லட்சியம் மற்றும் வளர்ச்சி குறித்து பேசலாம். ஆனால், சுயநலம் பற்றி பேசினால் பதில்கள் வேறாக இருக்கும். பணவீக்கமும் அதிகரித்து வருகிறது.
இரண்டு முறை பிரதமர் மோடிக்கு வாக்களித்த இளைஞர் ஏன் மீண்டும் அவருக்கு வாக்களிக்க வேண்டும்? அவரிடம் ஒன்றும் இல்லை. அரசியல் என்பது கருத்துகள், கொள்கைகள் மற்றும் பிரச்னைகளை சார்ந்தது. அது மக்களுக்கு எடுத்து செல்லும் வகையில் முடிவுகள் அமையும். கடந்த இரண்டு தேர்தல்களில், பாஜக ஒவ்வொரு வாக்காளரின் கதவுகளையும் தட்டியது. வாக்காளர்களை நேரே சென்று சந்திக்கும் தொண்டர்கள் போன்றவற்றில் காங்கிரசை விட சிறப்பாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
“மதத்தின் அடிப்படையில் மக்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்”
கடந்த 10 வருடங்களில் அரசியல் பேச்சுவழக்காக வகுப்புவாதம் மாறி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். சிறுபான்மையினரை தள்ளி வைப்பதால் இந்த நாடு முன்னேறாது. ஒரு கட்டத்தில், ஒரு சதவிகிதத்தினர் கூட இந்த நாட்டில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று முடிவு செய்து அதை வெடிக்கச் செய்வார்கள்.
அப்போது இந்து-முஸ்லிம் கலவரம் பற்றிய அனைத்து மெத்தனமும் நீங்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள் என்று அரசை அழைக்கிறேன். நீங்கள் காங்கிரஸை ‘போலி மதச்சார்பற்றவர்’ என்று தாக்கும் போது, ​​உண்மையான மதச்சார்பற்றவராக இருங்கள் என நான் கூறுகிறேன். மதத்தின் அடிப்படையில் மக்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்” என்றார்.
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய சசி தரூர், “இந்நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளுக்கும் கட்சிகளுக்கும் வாக்களிக்கின்றனர். நாடாளுமன்ற பெரும்பான்மை அதன் பிரதமரை தேர்ந்தெடுக்கிறது. INDIA போன்ற கூட்டணியில், தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதற்காக, பல்வேறு கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடக்கும்” என்றார்.

மேலும் காண

Source link

• Samantha Photos : மனதை மயக்கும் நடிகை சமந்தாவின் மலேசியா ட்ரிப் புகைப்படங்கள்!

Samantha Photos : மனதை மயக்கும் நடிகை சமந்தாவின் மலேசியா ட்ரிப் புகைப்படங்கள்!

Samantha Photos : மனதை மயக்கும் நடிகை சமந்தாவின் மலேசியா ட்ரிப் புகைப்படங்கள்!

Source link

• அச்சச்சோ! பின்னால் வந்து மோதிய லாரி! சென்னை மேயர் ப்ரியா சென்ற கார் விபத்து! என்ன நடந்தது?

அச்சச்சோ! பின்னால் வந்து மோதிய லாரி! சென்னை மேயர் ப்ரியா சென்ற கார் விபத்து! என்ன நடந்தது?

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளானது. முன்னால் சென்ற கார் திடீரென திரும்பியதால், மேயர் பிரியா சென்ற கார், முன்னால் சென்ற கார் மீது மோதியது. இது மட்டும் இல்லாமல், மேயர் பிரியா வந்துகொண்டு இருந்த காரின் பின்னால் வந்து கொண்டு இருந்த லாரியும் மோதியதால், மேயர் பிரியா காரின் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் மேயர் பிரியாவுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
விபத்து காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் மேயர் பிரியாவின் காரின் பின்பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் மேயர் பிரியாவை பத்திரமாக மீட்டு மாற்றுக் காரில் அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேயர் பிரியா TN 04 BL 0001 என்ற பதிவு எண் கொண்ட காரில் ஆவடி அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்து கொண்டு இருந்தார். இந்நிலையில், மேயர் பிரியா சென்ற காருக்கு முன்னாள் சென்று கொண்டு இருந்த கார் தீடீரென திரும்பவே, மேயர் பிரியா சென்ற காரை இயக்கி வந்த ஓட்டுநர் கூடுமானவரை காரை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளார். ஆனாலும் கார் முன்னால் சென்ற காரின் மீது மோதியது. இதனால் பின்னால் வந்த லாரியும் மேயர் பிரியா சென்ற காரின் பின் பகுதியில் பலமாகவே மோதியது. இதனால் காரின் பின்பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தினால் மேயர் பிரியாவின் காரினை இயக்கி வந்த ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் எதுவும் சரியாக இயங்காதது என கூறப்படுகின்றது. அதாவது சென்னை – பெங்களூரு நெடுஞ்சலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. இதற்கு காரணம் நெடுஞ்சாலையில் உள்ள மின் விளக்குகள் சரியாக இயங்கவில்லை என்ற புகார் பலநாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் மேயர் பிரியாவின் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என காவல்துறையினர் மிகத் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் காண

Source link

• NITT has been awarded the THIRD PRIZE in promoting the official language

NITT has been awarded the THIRD PRIZE in promoting the official language

உள்துறை அமைச்சகம் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் தங்கள் அலுவலகங்களில் அதிகாரப்பூர்வ மொழியைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி (NITT) அனைத்து அலுவலகங்களிலும் அலுவல் மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 70க்கும் மேற்பட்ட மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அலுவலகங்கள் அனைத்தும் அந்தந்த அலுவலகங்களில் அலுவல் மொழியின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக அவர்களின் அர்ப்பணிப்புக்காக மதிப்பீடு செய்யப்படும். 2023 ஆம் ஆண்டிற்கான, திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் 2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக ராஜ்பாஷா அதிகாரிகள் நியமிக்கப்படாத அலுவலகங்களின் பிரிவின் கீழ் NITT மூன்றாம் பரிசு பெற்றுள்ளது. மூன்றாம் பரிசு மட்டுமல்ல, NITT மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் கடின உழைப்பிற்காக, நகர அலுவல் மொழி அமலாக்கக் குழு, NITT க்கு வேறு சில பிரிவுகளின் கீழ் பின்வரும் அடிப்படைகளை வழங்கியுள்ளது: ராஜ்பாஷா ஸ்தம்பம், ராஜ்பாஷா பாதபிரசர்ஷக், ராஜ்பாஷா கரமவீர் போன்றவை.
திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் டாக்டர். ஜி அகிலா, NITT-க்குள் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்கான சிறந்த பணிகளுக்காக ராஜ்பாஷா ஸ்டாம்ப் விருது பெற்றுள்ளார்.
NITT க்குள் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்காகக் காட்டப்பட்ட நுண்ணறிவுகளுக்காக, அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் (OLIC)-NITTயின் தலைவர் டாக்டர். என் குமரேசன் அவர்களுக்கு ராஜ்பாஷா பாதபிரசர்ஷாக் விருது வழங்கப்பட்டுள்ளது.
அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் (OLIC)-NITT கன்வீனர் டாக்டர் அங்கூர் சிங் ராணா, NITT-க்குள் அலுவல் மொழியை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக ராஜ்பாஷா கரமவீர் விருது பெற்றுள்ளார்.
NITT-ஐச் சேர்ந்த டாக்டர் ஜோதி சாஹு மற்றும் டாக்டர் கிருத்திகேயா சுக்லா ஆகியோர் டிசம்பர் 2023 இல் நகர மட்டத்தில் நகர ஆட்சிமொழி அமலாக்கக் குழுவால் NITT ஏற்பாடு செய்த கூட்டு இந்தி போட்டிகளில் பங்கேற்றதற்காக சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு பெற்றுள்ளனர்.

மேலும் காண

Source link

• WPL 2024 DC VS MI Delhi Capitals Alice Capsey Half Century Gives 171 Runs Mumbai Indians Target 172 Chinnaswamy Stadium Bangalore

WPL 2024 DC VS MI Delhi Capitals Alice Capsey Half Century Gives 171 Runs Mumbai Indians Target 172 Chinnaswamy Stadium Bangalore

மகளிர் பிரீமியர் லீக் 2024:
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. உலகளவிலும் ஐபிஎல் தொடருக்கு ரசிகர்கள் அதிகம். ஆண்களுக்கு மட்டுமே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வந்த நிலையில், மகளிருக்கும் இது போன்ற தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு மகளிர் பிரீமியர் லீக் அறிமுகப்படுத்தப்பட்டது. டெல்லி கேபிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் மகளிர் பிரீமியர் லீக்கின் 2-வது சீசன் பெங்களூருவில் இன்று தொடங்கியது. இந்த தொடரிலும் டெல்லி, குஜராத், மும்பை, பெங்களூர், யு.பி.  ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

அரைசதம் விளாசிய ஆலிஸ் கேப்ஸி:
அந்த வகையில் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் இன்று தொடங்கிய இந்த தொடரின் முதல் லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. அதன்படி, டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லானிங் மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.  இதில் 8 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற ஷஃபாலி வர்மா மும்பை இந்தியன்ஸ் அணி வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயில் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பின்னர், மெக் லானிங் உடன் ஜோடி சேர்ந்தார் ஆலிஸ் கேப்ஸி. இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினார்கள். இதில், மெக் லானிங் 25 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் பறக்கவிட்டு மொத்தம் 31 ரன்கள் எடுத்து நாட் ஸ்கிவர்-ப்ரண்ட் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஆலிஸ் கேப்ஸியுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி சேர்ந்தார்.

அந்த வகையில் இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் அரைசதத்தை பதிவு செய்தார் ஆலிஸ் கேப்ஸி. அந்தவகையில் மொத்தம் 53 பந்துகள் களத்தில் நின்ற அவர் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 75 ரன்களை குவித்தார். அதேபோல் மற்றொரு புறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இதனிடையே சதம் விளாசுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட ஆலிஸ் கேப்ஸி 75 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவ்வாறாக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களம் இறங்க உள்ளது.

Source link

• பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் காமெடி திருவிழா;  நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் கோடியில் இருவர் வெப் சீரிஸ்

பரிதாபங்கள் புகழ் கோபி, சுதாகரின் காமெடி திருவிழா; நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் கோடியில் இருவர் வெப் சீரிஸ்

யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.Do. Creative Labs  தயாரிப்பில், பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  நிறுவனம் இணைந்து வழங்க, பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ள வெப் சீரியஸை, இயக்குநர் ஷாகித் ஆனந்த் இயக்கவுள்ளார்.  ஸ்டார்ட் அப் துறையின் பின்னணியில் உருவாகியிருக்கும் காமெடி டிராமா சீரிஸ் ‘கோடியில் இருவர்’. வரும் பிப்ரவரி 25 முதல் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இந்த சீரிஸ் ஒளிபரப்பாகவுள்ளது.

கோடியில் இருவர் சீரிஸின் டிரெய்லர் வெளியான நிலையில், ரசிகர்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இணையம் முழுக்க வைரலாக பரவி வரும் இந்த டிரெய்லர் யூடுயூப் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

யூடுயூப் காமெடி மற்றும் சமூக பிரச்னைகளை நையாண்டி செய்யும் வீடியோக்கள் மூலம் தமிழகம் முழுக்க பிரபலமான கோபி மற்றும் சுதாகர், முதல்முறையாக தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு கலக்கலான, முழுமையான வெப் சீரிஸில் நடித்துள்ளனர். இந்த சீரிஸ் பரபரப்பான திரைக்கதையில், உயர்தர தொழில்நுட்ப அம்சங்களுடன், லைவ் லொகேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்தின் கதை என்ன?

கிராமத்தில் வாழும் இரு இளைஞர்கள் கிராம வாழ்வின் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க பெங்களூர் பயணித்து அங்கு ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி ஆரம்பிக்க முனைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்த சீரிஸின் கதை. ஐடி ஊழியர்கள், ஸ்டார்ட் அப் துவங்க ஆசைப்படும் இளைஞர்கள் என இன்றைய தலைமுறையினர் தங்கள் வாழ்வோடு எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளும் வகையிலான திரைக்கதையுடன்,  நகைச்சுவை கலந்து, அனைவருக்கும் பிடிக்கும் வண்ணம், கலக்கலான சீரிஸாக இந்த சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்டார்ட் அப் துறை பற்றி வரும் பல தொடர்கள் போல அல்லாமல், அந்த துறையின் பின்னணியை முழுக்க முழுக்க உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லும் வகையில், மிகுந்த ஆராய்ச்சிகள் செய்து, அத்துறை வல்லுநர்களின் கருத்துக்களை கேட்டறிந்து, இந்த சீரிஸின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

தங்கள் களத்திலிருந்து மாறுபட்டு ஒரு முழுமையான சிரீஸில் நடித்திருக்கும் கோபி, சுதாகர் தங்கள் முத்திரை காமெடியில் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுவரையிலும் பெரிய ஓடிடி தளங்கள் மட்டுமே முயற்சித்து வரும் தரத்தில், முதல் முறையாக யூடுயூப் தளத்திற்காக உட்சகட்ட தரத்தில், இந்த “கோடியில் இருவர்” வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது என படக்குழு தெர்வித்துள்ளது.

இந்த சீரிஸில் கோபி, சுதாகர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க,  அஜய் ரத்தினம், டிராவிட் செல்வம், செல்லா, விவேக் RV, நித்யஸ்ரீ, ராம்குமார் அண்ணாச்சி, ஆல்பர்ட் அஜய், அஸ்வத் போபோ, அர்ஜுன் மனோகர் (ஓர்ஜுன்), வெட்டிபையன் வெங்கட் & நிறைமதி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பெங்களூருவில் பல JordIndian வீடியோக்களை இயக்கிய ஷாகித் ஆனந்த் இந்த சீரிஸினை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இந்த சீரீஸ் டைட்டில் பாடலுக்கு இசையமைத்துள்ளார்.

போரிஸ் கென்னத் & ரோஹித் சுப்ரமணியன், டானில்லா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் இணைந்து இந்த சீரிஸிக்கு கதை எழுதியுள்ளனர். ரோஹித் சுப்ரமணியன் & போரிஸ் கென்னத் ஆகியோர் வசனங்கள் எழுதியுள்ளனர்.

Do. Creative Labs பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்த சீரிஸை, பரிதாபங்கள் புரடக்சன்ஸ் மற்றும்  Scaler  இணைந்து  வழங்குகிறது. ஆனந்த் அகல்வாடி, போரிஸ் கென்னத், ரோஹித் சுப்ரமணியன், டான்னிலா கொரேயா, சாஹித் ஆனந்த் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

Source link

• ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி

ராஜீவ் காந்தி வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலையான சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தார்.  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தனை, இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான சாந்தன் என்ற சுதேந்திரராஜா, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்தாண்டு விடுதலை செய்யப்பட்டார். இலங்கை தமிழரான அவர், திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். இதற்கிடையே, இலங்கைக்கு சென்று தனது வயதான தாயாரை பார்த்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என சாந்தன் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.
இந்த நிலையில், இலங்கைக்கு செல்ல, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம், இதற்கான பயண ஆவணத்தை வழங்கியுள்ளது. ஆனால், இந்த பயண ஆவணம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி வரைதான் செல்லுபடியாகும். எனவே, இலங்கைக்கு சாந்தன் சென்றாலும் அவர் ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன்பாக இந்தியா திரும்ப வேண்டும். அல்லது பயணத்தை நீட்டிக்க இலங்கை அரசிடம் அனுமதி கோர வேண்டும்.
இந்நிலையில், சாந்தன் கடந்த சில தினங்களாக, உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, இலங்கை நாட்டுக்குச் செல்ல, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இலங்கை தூதரகத்திடம் உரிய அனுமதி பெற்ற பின் இலங்கைக்கு அனுப்பப்படுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் காண

Source link

• இந்தியா வென்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் வெல்லும்; யு.என்.ஜி.சி.என்.ஐ மாநாட்டில் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி

இந்தியா வென்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் வெல்லும்; யு.என்.ஜி.சி.என்.ஐ மாநாட்டில் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி

ஐ.நா. குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவின் (யு.என்.ஜி.சி.என்.ஐ) 18-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார்.

இந்தியா வெற்றி பெற்றால், நிலையான வளர்ச்சி இலக்குகள் (எஸ்.டி.ஜி) வெற்றி பெறும். நீடித்த வளர்ச்சி இலக்குகள் வெற்றி பெற வேண்டுமானால், இந்தியா வெற்றி பெற வேண்டும்" என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வலியுறுத்தினார்.

மேலும் அவர் தனது உரையில், "நிலையான இந்தியாவை முன்னெடுத்தல்: முன்னோக்கி வேகமாக 2030 உடன் மாற்றத்தை இயக்குதல்" என்ற கருப்பொருளின் கீழ், ஒரு நாள் மாநாட்டில் பருவநிலை மாற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், நீர் பின்னடைவை மேம்படுத்துதல், நிலையான நிதி மற்றும் முதலீடு மூலம் செழிப்பை ஊக்குவித்தல் மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கான வாழ்க்கை ஊதியங்களை ஊக்குவித்தல் போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய பல்வேறு அமர்வுகள் இடம்பெற்றுள்ளன.

ஐ.நா. குளோபல் காம்பாக்ட் நெட்வொர்க் இந்தியாவின் (யு.என்.ஜி.சி.என்.ஐ) 18-வது தேசிய மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, ஐந்தாவது பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, மேலும் முதலீட்டுக்கு மிகவும் விருப்பமான இடமாக வேகமாக மாறி வருகிறது என்று கூறினார் .  இந்தியாவில் நிலவும் முடிவுகள்தான் உலகின் விளைவுகளை நிர்ணயிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த பத்தாண்டுகளில் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதில் இந்தியா அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர், 250 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பன்முக வறுமையிலிருந்து விடுபட்டுள்ளனர் என்றும், இது உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நாட்டின் உறுதிப்பாட்டிற்கு சான்று என்றும் கூறினார்.

உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், நீடித்த வளர்ச்சிக்கான இந்தியாவின் அணுகுமுறை பிரகாசிக்கிறது என்று திரு பூரி கூறினார். உலகின் கணிசமான பகுதியினர் சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரத்தைப் பெறுவதில் போராடி வரும் நிலையில், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று அவர் கூறினார். நிலைத்தன்மை இலக்குகளை அடைவதில் பரந்த நிதி இடைவெளி இருந்தபோதிலும், வளங்களைத் திரட்டுவதிலும், பயனுள்ள முன்முயற்சிகளை செயல்படுத்துவதிலும் இந்தியா தீவிரமாக உள்ளது என்று அவர் கூறினார்.

பெண்களுக்கு அதிகாரமளித்தலை நோக்கிய அரசின் முயற்சிகள் பற்றிப் பேசிய திரு. பூரி, இந்தியாவில் இதுவரை அனைத்துத் திட்டங்களும் பெண்களை மையமாகக் கொண்டவையாக இருந்தன என்றும், ஆனால் தற்போது பெண்கள் தலைமையிலான திட்டங்களை நோக்கி நகர்ந்துள்ளது என்றும் கூறினார். அரசியல் நடைமுறைகளில் பெண்களின் சமமான பங்கேற்பை உறுதி செய்வதற்காக கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க மகளிர் இடஒதுக்கீடு மசோதா” பற்றி அவர் குறிப்பிட்டார்.

Source link

• தேர்தல் அறிக்கையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதியில்லை –  கனிமொழி  காட்டம்

தேர்தல் அறிக்கையை விமர்சிக்க அதிமுகவுக்கு தகுதியில்லை – கனிமொழி காட்டம்

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் மூலம் நாடாளுமன்றத்தில் ஒலித்திட வேண்டிய தமிழ்நாட்டின் கருத்துகள் என்ற தலைப்பில் 2024 மக்களவை தேர்தலையொட்டி, திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்.பி யுமான கனிமொழி தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறனர். உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகள் பெறப்பட்டு, அதனை நாடாளுமன்றத்தில் ஒலித்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.  இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கை குழு வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள பேபி மஹாலில் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் மனுக்களை பெற்றனர். திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில்  திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவர் கனிமொழி பேசுகையில்;

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை எப்போதும் மக்களுடைய தேர்தல் அறிக்கையாக இருக்கும் என்பதற்குத் தான் தலைவர் கலைஞர் காலம் தொற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை தொடர்ந்து மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு அந்த கருத்துக்களைப் பதிவு செய்து, அதைத் தேர்தல் அறிக்கையை உருவாக்க வேண்டும் என உறுதியாக உள்ளது.  ஒவ்வொரு முறையும் தேர்தல் அறிக்கை உருவாக்கப்படும் போது, மக்களைச் சந்தித்து அவர்களுடைய விவரங்களை உள்வாங்கி உருவாக்கப்படுவதுதான் தி.மு.கவின் தேர்தல் அறிக்கை. அதன்படி, நாங்கள் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று, அங்கே இருக்கக்கூடிய விவசாய மக்கள், தொழிலாளிகள், தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், மாணவர்கள் என்று பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களைச் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டு, தேர்தல் அறிக்கை உருவாக்கக் கூடிய பணியில் ஈடுபட்டு இருக்கின்றோம் என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தேர்தல் அறிக்கை குழு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மக்களிடம் கருத்துக்களை கேட்டு வருகிறது.பல்வேறு துறைகளைச் சார்ந்த மக்களிடம் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் ஒருங்கிணைத்து தேர்தல் அறிக்கை தயாரிக்க உள்ளோம். மக்கள் அளிக்கும் கோரிக்கைகளை திமுக கண்டிப்பாக நிறைவேற்றும். முதலில் பிரதமர் மோடி 15 லட்சம் அனைவருக்கும் வங்கி கணக்கில் அனுப்புவதாக தெரிவித்தார். அதை பிரதமர் மோடி அனுப்பிய பிறகு அண்ணாமலை விமர்சிக்க உரிமை உண்டு.  இந்தியாவில் எல்லா கட்சிகளும் 50% கூட தேர்தல் பத்திரம் வாங்வில்லை. பாஜக வில் தான் அதிக அளவில் பத்திரம் வாங்கியுள்ளார்கள். அவர்கள் யாரும் குற்றம் சொல்ல முடியாது. தன்னுடைய கட்சி பணத்தை கொண்டு வருவதற்காக பிஜேபி தவறான சட்ட வடிவம் கொண்டு வந்துள்ளது. அதை தான் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. 10 வருடமாக ஆட்சி நடத்தி தமிழகத்தை பின்னோக்கி நகரக்கூடிய நிலையில் வைத்துவிட்டு சென்றனர். இன்றைக்கு திமுக ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு எல்லா வகையிலும் எல்லா துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

கல்வி, சுகாதாரம், தொழில் முனைவோர் வேலை வாய்ப்பு உருவாக்குதல் அனைத்தும் திமுக ஆட்சியில் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கை விமர்சிக்கிற அளவுக்கு அதிமுகவுக்கு தகுதியில்லை. பாஜகவுக்கு யார் எதிராக பேசினாலும் அவர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது இன்றைய மத்திய அரசாங்கத்தின் தொடர் நிலையாகும். விவசாயிகளின் போராட்டத்தை இந்த மத்திய அரசு குற்ற சம்பவங்களை போல நடத்தி வருகிறது . கண்ணீர் புகை குண்டு, கம்பிகளை கொண்டு அச்சுறுத்தி வருகிறது. விவசாயிகள் ஞாயத்துக்காக போராடி வருகிறார்கள் .ஆனால் பாஜக அரசு அதைக் கேட்க மனதில்லை அவர்களை எதிர்த்து ஊடகங்கள் குரல் எழுப்பினாலும் அவர்களை கூட நசுக்குகிறது. செய்யார் அருகில் சிப்காட் வேண்டாம் என பொதுமக்கள் போராடி வருகின்றனர் என செய்தியாளர்கள் கேட்டதற்கு இது குறித்து நான் முதல்வரை சந்திக்கும்பொழுது விவரங்களை தெரிவிப்பேன். மேலும் விவசாயிகளை சந்தித்து விரைவில் சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

Source link

• Raayan: ’ராயன்’ படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் – தனுஷ் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்!

Raayan: ’ராயன்’ படத்தில் நடிக்கும் இன்னொரு பிரபலம் – தனுஷ் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்!

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம் தொடர்பான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான முக்கிய அறிவுப்பு ஒன்றை தனுஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

What a pleasure @prakashraaj sir 🤗♥️ pic.twitter.com/7ZzoVeEntk

— Dhanush (@dhanushkraja) February 23, 2024

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் தன்னுடைய 50வது படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ப.பாண்டி படத்தை தனுஷ் இயக்கியிருந்ததால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் செல்வராகவன் ஏற்கனவே இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், பிரகாஷ் ராஜூம் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக  தனுஷ் தெரிவித்த நிலையில் ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ராயன் படத்துக்காக தனுஷ் மொட்டையடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் வன்முறைக்கு படத்தில் பஞ்சம் இருக்காது என்பதை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உறுதி செய்துள்ளது.

Source link

• சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா  ஜாமீன் மனு ஒத்திவைப்பு ; மார்ச் 6 வரை சிறையில் அடைக்க உத்தரவு

சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா ஜாமீன் மனு ஒத்திவைப்பு ; மார்ச் 6 வரை சிறையில் அடைக்க உத்தரவு

சேரன்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா திருவாரூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய மனுவை 28 ஆம் தேதி ஒத்திவைத்ததுடன் மார்ச் 6ம் தேதி வரை அமுதாவை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்டம் கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த  ரோஸ்லின் என்பவரது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும் போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும் ரோஸ்லினுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் மன்னார்குடி நடேசன் தெருவில் உள்ள ஞானாம்பாளுக்கு சொந்தமான, 20 கோடி ரூபாய்  மதிப்பிலான  சுமார் 1 லட்சம் சதுரடி நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் செய்துள்ளதாக அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றதலைவி அமுதா, அவரது கணவரும் மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவர்  மனோகரன், மற்றும் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக 14 பேர் மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரோஸ்லின் தொடர்ந்த வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு  சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சிபிசிஐடி போலீஸார் கடந்தாண்டு, செப்டம்பர் மாதம் முதல் வழக்கு விசாரணையை துரிதமாக நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் மனோகரனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் முதல் குற்றவாளியாக உள்ள அமுதா தலைமறைவாகியிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி அமுதாவின் ஊராட்சி மன்ற தலைவர் பதவியை ரத்து செய்ய வேண்டுமென கோரினர். அதைத் தொடர்ந்து சென்னை  உயர்நீதிமன்றம் ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து அமுதாவை நீக்கி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அமுதா சார்பில் அணுகியதால் உச்ச நீதிமன்றம் 3 நாட்களுக்குள் விசாரணை நீதி மன்றமான திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் அமுதா ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டதையடுத்து, அவர் நீதிபதி பாலமுருகன் முன்பு கடந்த வாரம் ஆஜரானார். இதனையடுத்து அமுதாவை 23.02.2024 வரை சிறையில் அடைக்க நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். இந்த நிலையில் ரோஸ்லின் தொடர்ந்த நில மோசடி வழக்கில் சேரன் குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி அமுதா அவரது கணவர் மனோகரன் உள்ளிட்ட 13 நபர்கள் இன்று திருவாரூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதித்துறை நீதிமன்றம் முன்பு ஆஜராகி உள்ளனர். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 6 ஆம் தேதி  ஒத்தி வைத்த நீதிபதி அதுவரை அமுதாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அமுதா இதே நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வரும் 28 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார். நில மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 14 நபர்களில் 13 பேர் இன்று ஆஜரான நிலையில் ராஜேந்திரன் என்பவர் மட்டும் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து அமுதா உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனுவின் விசாரணையை மூன்று வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Source link