"என் மகள் அனந்திதா, சுந்தர்.சி சார் மாதிரி!"- பெருமைப்பட்ட தாய் குஷ்பு; கண்கலங்கிய மகள்! |"The person who included everyone else's name forgot to include their own!" — Khushbu

இந்த நிகழ்வில் குஷ்பு பேசுகையில், “பசங்களுக்கு இப்போ அட்வைஸ் தேவையில்லை. அவங்ககிட்ட இருந்து நம்மதான் கத்துக்கணும். நம்மகிட்ட நிறைய பழைய சிந்தனைகள் இருக்கும். இன்னைக்கு இருக்கிற இளைஞர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கு. என்னுடைய மூத்த மகள் அவந்திகா சுந்தர் மலையாள திரைப்படத்துல நடிச்சிட்டு இருக்காங்க.

அதைத்தாண்டி தமிழ்ல ரெண்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்காங்க. தினமும் கதைக் கேட்டுட்டு இருக்காங்க. இந்த விஷயங்கள் தாயாக என்னை பெருமைப்பட வைக்குது. இரண்டாவது மகள் அனந்திதா சுந்தர் தயாரிப்பு நிறுவனத்தின் பணிகளை கவனிச்சிட்டு இருக்காங்க.

இந்த ‘டபுள் ஆக்குபன்சி’ படத்திற்குப் பிறகு ‘மீசைய முறுக்கு 2’ படத்தையும் அவங்க தயாரிச்சு முடிச்சிட்டாங்க. தினமும் தயாரிப்பிற்காக கதைகள் கேட்கிறாங்க. என்னுடைய மகள்கள் சரியான பாதையில போவதை நினைச்சு நானும் சுந்தர்.சி சாரும் ரொம்ப பெருமையாக உணர்கிறோம்.

எனக்கு இந்த நிகழ்வு ரொம்பவே முக்கியமான தருணம். என்னுடைய மகள் அவந்திகா சுந்தரின் பெயரை ‘டபுள் ஆக்குபன்சி’ படத்தின் போஸ்டர்ல பார்க்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கு. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்திலையும் அவங்க வேலை பார்த்திருக்காங்க.

கடைசில ரோலிங் கிரெடிட்ஸ்ல எல்லோருடைய பெயரையும் போட்டது என்னுடைய மகள்தான். எல்லோருடைய பெயரை போட்டவங்க, தன்னுடைய பெயரை போடுறதுக்கு மறந்துட்டாங்க. ‘அனந்திதா அவங்களுடைய பெயரை போடுறதுக்கு மறந்துட்டாங்க’னு மணி ரத்னம் சாரும் சொல்லி காண்பிச்சார்.

சுந்தர் சார்கிட்ட எப்படியான ஒரு தலைமைப்பண்பு இருக்கோ, அதுபோல என்னுடைய மகள் அனந்திதாவுக்கும் இருக்கு. அவங்க அப்படியே சுந்தர் சார் மாதிரிதான். தன்னம்பிக்கையும், அறிவுத்திறனும் கொண்டவங்க அனந்திதா” எனப் பேசினார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Этот обзор посвящен успешным стратегиям избавления от зависимости, включая реальные примеры и советы. Мы разоблачим мифы и предоставим читателям достоверную…

  2. Рекомендации строятся вокруг состояния человека, а не по универсальному шаблону для всех случаев. Дополнительная информация – https://nnarkologicheskaya-klinika-sankt-peterburg14.ru/

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed