ஹோர்மூஸ் நீரிணை முற்றுகை டிரம்ப்: வளைகுடா துறைமுகங்களை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை - Kumudam

ஈரான், அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் சனிக்கிழமை நடைபெற்ற போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, திங்கள்கிழமை காலை ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு (அமெரிக்கா முற்றுகையிட்ட நேரத்தில்) சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் அட்மிரல் டாங் ஜு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டார். “ஈரானுடன் எங்களுக்கு வர்த்தக மற்றும் எரிசக்தி ஒப்பந்தங்கள் உள்ளன. எங்கள் விவகாரங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “ஈரானியக் கடற்பரப்பு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முற்றுகையிடப்பட்டு அதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிக்குள் ஈரானியக் கப்பல்கள் நுழைந்தால் தாக்கி அழிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் ராணுவம் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் ஏப்.13 முதல் தடுக்கப்படும். இதில் அரபு வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவில் உள்ள ஈரான் துறைமுகங்களுக்கு வந்து செல்லும் கப்பல்களும் அடங்கும். இவ்வாறு கப்பல்களைத் தடுக்கும் நடவடிக்கையில், எந்த நாட்டு கப்பலுக்கும் பாரபட்சம் காட்டப்படாது. அனைத்து நாட்டுக் கப்பல்களும் தடுக்கப்படும்.

இந்த நடவடிக்கைக்குப் பதிலடி அளிக்கும் விதமாக ஈரான் ராணுவம் மற்றும் அந்நாட்டு புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஈரானின் சட்டபூர்வ உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை கடமையாக ஈரான் ஆயுதப் படைகள் கருதுகின்றன. ஈரான் கடற்பரப்பில் தனது இறையாண்மை நிலைநாட்டப்படுவது ஈரானின் அடிப்படை உரிமையாகும்.

 

இந்தக் கொள்கையின் அடிப்படையில் ஈரான் கடற்பரப்பைப் பாதுகாக்கும் பணியைத் தொடர வேண்டும் என்பதில் ஈரான் படைகள் உறுதியாக உள்ளன.

ஏற்கெனவே தெரிவித்ததுபோல ஹோர்முஸ் நீரிணையில் ஈரானின் எதிரி நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்கள் அனுமதிக்கப்படாது. அதேவேளையில், ஈரான் ஆயுதப் படைகளின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு செயல்படும் வரை, பிற நாடுகளின் கப்பல்கள் அந்த நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும்.

 

அமெரிக்காவுடன் சமீபத்தில் நடைபெற்ற தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளபோதிலும், ஹோர்முஸ் நீரிணையை மேற்பார்வையிட நிரந்தர வழிமுறையைத் தொடரவேண்டும் என்று ஈரான் கருதுகிறது.

கடற்கொள்ளைக்கு ஒப்பாகும்: சர்வதேச கடல் போக்குவரத்தில் அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானவை; கடற்கொள்ளைக்கு நிகரானது. 

 

பாரசீக வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் நோக்கில், தனது அண்டை நாடுகளான சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் அமைக்கப்பட்டிருந்த அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. 

 

தற்போது ஈரான் துறைமுகங்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்கள் பாதுகாப்பாக இருக்காது என்று அந்நாடு தெரிவித்துள்ளதன் மூலம், சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

 

அமெரிக்க கப்பல்களை நெருங்கினால்…: இந்த நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க அதிபர் ‘டிரம்ப் ட்ரூத்’ சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 158 கப்பல்கள் தடமில்லாமல் அழிக்கப்பட்டு கடலுக்கு அடியில் உள்ளன. தற்போது அந்நாட்டிடம் விரைந்து தாக்கும் கப்பல்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளன. இந்தக் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் அனைத்துக் கப்பல்களையும் தடுக்கும் அமெரிக்க கப்பல்களை நெருங்கினால், கடலில் போதைப் பொருள் கும்பல்களை அமெரிக்கா அழித்ததைப் போல கொடூரமான தாக்கப்பட்டு அழிக்கப்படும் என்று எச்சரித்தார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed