லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி.. உடல்நிலை எப்படி உள்ளது?


பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனும் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தற்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார்.
லாலு பிரசாத் யாதவ் மகனுக்கு நெஞ்சு வலி:
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பிகார் முன்னாள் அமைச்சருமான தேஜ் பிரதாப் யாதவின் உடல்நிலை இன்று திடீரென மோசமடைந்தது. உடனடியாக அவர் பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேஜ் பிரதாப் யாதவுக்கு இன்று மதியம் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தனக்கு குறைவான ரத்த அழுத்தம் இருப்பதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவரை மருத்துவர்கள் குழு பரிசோதித்து வருகிறது.
குறைந்த ரத்த அழுத்தத்தாலும் நெஞ்சுவலியாலும் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவமனையில் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் குழு மும்முரம் காட்டி வருகிறது.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
இதற்கிடையே, தேஜ் பிரதாப் யாதவின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது என்ற செய்தியை அடுத்து, ஏராளமான ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வரத் தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டும் தேஜ் பிரதாப்பின் உடல்நிலை மோசமடைந்ததால், பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார் என குறிப்பிடத்தக்கது.  
பல ஆண்டுகளாகவே, தேஜ் பிரதாப், கடுமையான நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தேஜ் பிரதாப்பின் உடல்நலக்குறைவு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணம் அடைய வேண்டும் என தாங்கள் பிராத்திப்பதாக பலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  
தனது கருத்துகளின் மூலம் தொடர் கவனத்தை பெற்று வரும் தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியில் செல்வாக்கி மிக்க தலைவராக இருந்து வருகிறார். இளைஞர் அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட தேஜ் பிரதாப் யாதவ், சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.  
ரீல்ஸ் வீடியோ தயாரித்து வெளியிடுவதில் தனக்கென தனி பாணியை கையாண்டு வருகிறார். அதே நேரத்தில், தனது ஆன்மீக நம்பிக்கைகளால் ஆதரவாளர்கள் மத்தியில் தனி செல்வாக்கு செலுத்தி வருகிறார்.
இதையும் படிக்க: Kavitha Arrest: சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள்? கேசிஆர் மகள் கவிதா கைது! அமலாக்கத்துறை அதிரடி!

மேலும் காண

Source link