தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகைகளாக இருக்கும் பலரின் பெயரும் சினிமாவிற்காக மாற்றப்பட்ட பெயர்கள் தான். எளிதில் ரசிகர்களை கவரும் வகையில் பெயர்களை மாற்றுவது என்பது காலம் காலமாக திரையுலகில் நடைபெறும் ஒன்று தான். அந்த வகையில் சினிமா வாழ்க்கைக்காக பெயரை மாற்றி கொண்ட ஒரு சில நடிகைகளை பற்றி பார்க்கலாம்:

மனோரமா :

தமிழ் சினிமாவின் தவபுதல்வி என கொண்டாடப்பட்ட ஆச்சி மனோரமா, ஆண்களின் அதிகாரம் நிறைத்த திரையுலகில் ஒரு பெண் நகைச்சுவை நடிகையாக சிகரம் தொட்டவர். அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த ஒரு முன்னோடியாக விளங்கிய ஆச்சி மனோரமாவின் உண்மையான பெயர் கோபிசாந்தா.

ரோஜா :

செம்பருத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் நடிகை ரோஜா. முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த ரோஜா தற்போது சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கி அமைச்சராக நாட்டுக்கு சேவை செய்து வருகிறார். ரோஜாவின் இயற்பெயர் ஸ்ரீ லதா ரெட்டி.

ரம்பா :

ஹைஸ்பீடில் உச்சத்தை தோட்ட நடிகைகளின் வரிசையில் இடம்பிடித்தவர் நடிகை ரம்பா. விஜயலட்சுமி என்ற அவருடைய பெயர் ரம்பா என மாற்ற பட்டது. அழகான சிரிப்பு, வெகுளித்தனமான நடிப்பு, கொஞ்சல் பேச்சு என ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். சினிமாவில் இருந்து அவர் விலகி இருந்தாலும் அவருக்கு இன்றும் ரசிகர் பட்டாளம் எக்கச்சக்கமாக உள்ளது.

ஜோதிகா :

நடிகை நக்மாவின் தங்கை என்பதால் ஜோதிகாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு எளிதில் கிடைத்தது. வாலி படத்தில் சோனா என்ற கதாபாத்திரமாக ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்து போனாலும் ரசிகர்களை உடனே கவர்ந்தார். ஒரு நொடியில் அவர் கொடுக்கும் ஓராயிரம் எக்ஸ்ப்ரெஷனுக்கே ரசிகர்கள் அவரை கொண்டாடினர். மிகவும் நேர்த்தியாக கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகாவின் உண்மையான பெயர் சாதனா.

நயன்தாரா :

லேடி சூப்பர் ஸ்டார் என தென்னிந்திய சினிமா கொண்டாடும் நடிகை நயன்தாரா உண்மையான பெயர் டயானா மரியம் குரியன். பெரும்பாலும் வுமன் சென்ரிக் படங்களாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா ஜவான் படம் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துவிட்டார்.

நதியா :

80 காலகட்டத்தில் டாப் மோசட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை நதியா. பூவே பூச்சூடவா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் இயற்பெயர் சரீனா மொய்டு.

சினேகா :

வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஆட்டோகிராப், ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சினேகா. புன்னகை அரசி என கொண்டாடப்படும் நடிகை சினேகாவின் உண்மையான பெயர் சுஹாசினி.

சிம்ரன் :

90ஸ் காலகட்டத்தில் டாப் நடிகையாக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இன்றும் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சிம்ரன் உண்மையான பெயர் ரிஷிபாலா நாவல்.

அனுஷ்கா ஷெட்டி:

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. அருந்ததி, ருத்ரம்மா தேவி, சைஸ் ஸீரோ உள்ளிட்ட வுமன் சென்ட்ரிக் படங்களில் கலக்கிய அனுஷ்கா ஷெட்டியின் இயற்பெயர் ஸ்வீட்டி.

ஊர்வசி :

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது வெகுளித்தனமான நடிப்பின் மூலம் சிக்ஸர் அடிக்கும் சகலகலாவல்லி நடிகை ஊர்வசி. அவரின் உண்மையான பெயர் கவிதா ரஞ்சினி.