மக்கள் சேவையாற்ற தயாராக இருக்கிறோம் தவெக அமைச்சர்கள் பேச்சு - Kumudam

தவெக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக திருச்சிக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் விஜயை விமான நிலையத்தில் மதிமுக எம்.பி. துரை வைகோ, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ரமேஷ் உள்ளிட்டோர் வரவேற்றனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஜோசப் கல்லூரி வரை சுமார் 10 கி.மீ முதல்-அமைச்சர் சாலை வலம் மேற்கொண்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு தொண்டர்கள் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து திருச்சியில் பொதுக்கூட்டம் நடைபெறும் ஜோசப் கல்லூரி மைதான திடலுக்கு முதலமைச்சர் விஜய் வருகை தந்தார். திருச்சி கிழக்கு தொகுதி இதன் ஒரு பகுதியாக திருச்சி ஜோசப் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.

நிகழ்ச்சியில் அமைச்சர் என். ஆனந்த் பேசியதாவது: நான் இங்கு அமைச்சராக இருக்கக் காரணம் விஜய்க்காக மக்கள் அளித்த வாக்குகளே காரணம். மக்களுக்காக சேவையாற்ற தயாராக இருக்கிறோம் என பேசினார். 

இதன் பின்னர் பேசிய அமைச்சர் ரமேஷ்:  சின்ன பசங்க என்று ஏளமனாக பேசாதீர்கள். சின்ன பசங்க யார் என்று நிரூபிப்பார்கள் என்று முன்பு பிரசாரங்களில் கூறினேன். இப்போதும் ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த சின்ன பசங்க, எதிர்காலத்தில் எதிர்க்கட்சியே இல்லாத சட்டப்பேரவையை அமைப்போம் என்று கூறிக்கொள்கிறேன் என்றார். 

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Найти подходящий микрозайм можно в МАХ канале https://max.ru/channel_bank_neva, где мы постоянно размещаем свежие предложения микрофинансовых организаций и помогаем сравнивать условия…

  2. Навесной вентилируемый фасад https://fastek.by/ventiliruemyie-fasadyi надёжная защита здания и стильный облик! Эффективно отводит влагу, снижает теплопотери и служит десятилетиями.

  3. Закажите ворота с калиткой для частного дома с учетом размеров проема и особенностей участка. Подберем подходящую конструкцию, цвет и оформление,…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed