புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை ஏப்ரல் 29 முதல் துவங்குகின்றது என்று மாவட்ட கல்வித்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகள் இந்த கல்வியாண்டு முழுமையாக மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரி மாநில கல்வித்துறை கோடை விடுமுறையை அறிவித்துள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. ஜூன் 6-ம் தேதி பள்ளி மீண்டும் திறக்கப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மாணவர் சேர்க்கை

இதனையடுத்து வரும் மார்ச் 25ந் தேதி முதல் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

சிபிஎஸ்இ பாடத்திட்டம்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தமிழக அரசின் பாடத்திட்டத்தை அமல்படுத்தி வந்த புதுச்சேரி அரசு, தற்போது அந்த பாடத்திட்டத்தை கைவிட முடிவு செய்திருக்கிறது. இரண்டாவதாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்துக்கு மாறப்போவதாக அறிவித்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பி இருக்கிறது.

இந்தியக் கல்வி முறை என்பது CBSE, CISCE, NIOS எனும் 3 மத்திய அரசு கல்வி வாரியங்களையும், தமிழ்நாடு போன்று 30-க்கும் மேற்பட்ட மாநில அரசு கல்வி வாரியங்களையும் கொண்டுள்ளது. அதோடு, தனியார் பள்ளிகளின் கல்வி வாரியமான ICSE, சர்வதேச கல்வி வாரியமான IB, CIE ஆகியவையும் இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.