`பத்துக்கு பத்து வீட்ல மொத்த குடும்பமும் வசிச்ச‌தை நினைச்சா..' - புதுமனை புகுந்த‌ நடிகர் தங்கதுரை


எப்படியோ முட்டி மோதி இன்னைக்கு சென்னையின் முக்கியமான இடமான கோயம்பேட்டில் 19 வது மாடியில சொந்தமா ஒரு ஃபிளாட்டை வாங்கிட்டேன்.

‘நம்ம குடும்பத்துல சொந்த வீடு வாங்குகிற முதல் தலைமுறை’னு பெருமையாச் சொன்னார் அப்பா. சாதாரண கூலி வேலை செஞ்சுகிட்டே கஷ்டத்துக்கு மத்தியிலயும் அஞ்சு பிள்ளைகளை படிக்க வச்சு நல்லவிதமா ஆளாக்கி விட்ட அவர் பண்ணினதுதான் சாதனை” என்றவர், தன்னுடைய புது வீடு குறித்து உற்சாகமாகத் தொடர்ந்தார்…

“மூணு பெட்ரூம் வீடு. நீச்சல் குளம், லைபரரி, விளையாட கிரவுண்டு என எல்லா வசதியும் இருக்கிற கேட்டட் கம்யூனிட்டி ஏரியா. எனக்கு கிடைக்காத வசதி வாய்ப்புகள் என் பிள்ளைக்குக் கிடைச்சிருக்குங்கிறதுல சந்தோஷமா இருக்கு. அதேபோல சொந்தக்காரங்க எல்லாரையும் ஃபங்ஷனுக்குக் கூப்பிட்டேன்.

சிலர் கண் பட்டுடும்னு கிரஹப் பிரவேசத்தை கிராண்டா செய்ய வேண்டாம்னு சொல்வாங்க. என்னால இதை ஏத்துக்க்க முடியலை. என் சொந்த பந்தம், அண்ணன் தம்பி பங்காளிங்க எல்லாமே ஒண்ணுமண்ணாவே கஷ்டப்பட்டுட்டுதான் இருந்தோம். அதுல ஓரளவு வசதி வந்த நான் புதுசா ஒரு வீட்டை வாங்கிக் குடியேறுகிறப்ப அவங்களுக்கும் அது ஒரு உத்வேகத்தைத் தருமில்லையா?

நாம நல்லவிதமா யோசிச்சா நமக்கும் நல்லதுதான் நடக்கும்னு உறுதியா நம்புறேன்” என நெகிழ்ச்சியுடன் முடித்தார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed