பரந்தூர் விமான நிலையம் மாதிரி திட்டம்


பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்று முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்.24) சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இது குறித்து பேச திமுக அனுமதி கேட்டது. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் பேச எதுவும் இல்லை என சபாநாயகர் மறுத்து விட்டார். இதனால் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில்,“உங்களின் அரசியல் வீம்பிற்காக தமிழகத்தின் வளர்ச்சியை முடக்காதீர்கள் முதல்வர் அவர்களே! விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு.

பரந்தூர் விமான நிலையம் மாதிரி திட்டம்

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா? சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, Need & Demand மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தேர்தலின் போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “Process”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம். உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது. அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா? மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது? எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் திரு. ஜோசப் விஜய் அவர்களே!” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Каталог нейросетей AI-Panda https://ai-panda.ru это более 1000 AI-инструментов в одном месте. Найди идеальную нейросеть для своих задач: генерация изображений, работа…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed