கரூர் மேட்டுத்தெரு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சுவாமி அன்னபட்சி வாகனத்தில் வீதி உலா வந்தார்.

கரூர் மேட்டு தெரு பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலத்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. நிகழ்ச்சியை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.

இந்நிலையில் அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி அன்னபட்சி வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அது தொடர்ச்சியாக அன்னபட்சி வாகன அலங்காரத்தில் சுவாமி வானவேடிக்கை முழங்க ஆலயத்திலிருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி விழா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடிப்பகுந்தது.

கரூர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முதல் நாள் சுவாமி உற்சவர் திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.