<p style="text-align: justify;">நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளியாக சுற்றி வருகிறார். இந்த நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.கே.எஸ்.அன்பழகன் காலமானார் என்ற செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.</p>
<h2 style="text-align: justify;">அதிமுகவினர் இரங்கல்</h2>
<p style="text-align: justify;">இந்தநிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்வர் இன்று சிகிச்சை பலனின்றி காலமானர். இந்த செய்தி அதிமுகவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.</p>