இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
அங்கு மக்களிடம் விலைவாசி குறித்து விசாரித்ததாகவும், தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்தும் பதிவிட்டுள்ளார் ஸ்டாலின்.
அவரது பதிவு…
“MLA Shopping-இல் மும்முரமாக இருக்கும் முதலமைச்சருக்கு, மக்கள் மளிகைக் கடையில் கூட shopping செய்ய முடியாமல் கஷ்டத்தில் தவிப்பது தெரியுமா?
தாராபுரத்தில் பரப்புரைக்கு இடையே மளிகைக் கடை ஒன்றில் விலைவாசி உயர்வு குறித்து கேட்டேன். 4 மாதம் முன்பிருந்த விலையில் இருந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவுக்கு உயர்ந்துள்ளது.

அன்றாடச் சமையலுக்கே வீடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. ரீல்ஸ் பார்த்தால் மக்களின் வயிறு நிறையுமா?
இந்தியா முழுவதும் பொருளாதார வளர்ச்சி இறங்குமுகத்தில் இருந்தபோது கூட, #DravidianModel ஆட்சியில் தமிழ்நாடு ஏறுமுகத்தில் இருந்தது.
ஆனால் இன்றைய நிலை என்ன?
இந்தியா முழுவதும் GST வருவாய் உயர்ந்த நிலையில் கூட, கடந்த மூன்று மாதங்களாக தமிழ்நாடு சரிவைச் சந்தித்து வருகிறது.
இந்த ஆட்சி வேலைக்கு ஆகாத Waste ஆட்சி என முடிவெடுத்து, தமிழ்நாடு அரசின் முதலீட்டு ஊக்குவிப்பு முகமையான Guidance TN-இல் இருந்தும் அனுபவமிக்க வல்லுநர்கள் வேறு மாநிலங்களுக்குச் செல்வதாகச் செய்திகள் வருகின்றன.

























Lielaka dala Vavada automatu ir palaizami demo rezima bez registracijas, lai mehaniku izpetitu pirms realas likmes. Viegla interfeisa versija bez…