"பவிஷ் ரொம்ப ஆர்வத்தோடு நடிக்கிறதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருந்தது." - கே.எஸ். ரவிக்குமார் |"It was a pleasure to see Pavish acting with such enthusiasm." - K.S. Ravikumar

ஒருமுறை என் வீட்டுக்கு வந்து, நடப்பு தயாரிப்பாளர் சங்கத்துல உங்களை ஈசி மெம்பரா போட்டிருக்கோம் என்றார். நானும் முதலில் மறுத்துப் பார்த்தேன், பின்னர் சரி என்று விட்டேன்.

அப்போதுதான், ‘நான் ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன், நான் டைரக்டரை அனுப்புறேன். கதையில நீங்க ஹீரோவுக்கு அப்பாவா நடிக்கணும்’ என்றார். நானும் சரி, கதை கேட்டுட்டுச் சொல்றேன்னு சொல்லியிருந்தேன்.

இன்னொரு நாள் இந்த படத்தோட இயக்குநர் மகேஷ் வீட்டுக்கு வந்தாரு, ஹால்ல உக்காந்து கதை கேட்கத் தொடங்கினேன். டயலாக் எல்லாம் அனல் பறக்குற மாதிரி சத்தமா சொன்னாரு. வீட்ல வேலை பாத்துட்டு இருந்தவங்க, சமைச்சவங்க எல்லாரும் வந்து எட்டிப் பார்த்தாங்க.

கே.எஸ் ரவிக்குமார்

கே.எஸ் ரவிக்குமார்

மூன்றாவது மாடியில் இருந்து என் மனைவி வந்து, ஏதும் பிரச்சினையான்னு கேட்டாங்க. அந்தளவுக்குப் பயங்கரமா டயலாக் எல்லாம் பேசிக் காமிச்சாரு. மகேஷோட முதல் படம் மாதிரியே இல்லை.

அவர் வேலை செய்த விதமா இருக்கட்டும், மற்றவர்களை வேலை வாங்கின விதமா இருக்கட்டும், எல்லாமே சிறப்பா இருந்தது.

சில நேரங்கள்ல இந்த படத்தோட கதாநாயகன் பவிஷூடைய குரல் தனுஷ் குரல் மாதிரியே இருக்கும். பவிஷ் ரொம்ப ஆர்வத்தோடு நடிக்கிறதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியா இருந்தது.” என்றார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed