கரூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைப்பு அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 100 மீட்டருக்குள் வெள்ளை கோடு வரைந்து இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், அரசியல் கட்சியினரை போலீசார் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை பகுதிக்கு கொண்டு செல்லப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் திறந்து வைத்து பார்வையிட்டார் ஆய்வு செய்தார்.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசு அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் பரிசோதனை செய்த பிறகு சீல் வைத்து மாலை அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாகனம் மூலம் போலீசார் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்க உள்ளது.
மேலும் காண

























Reading this site over the past week has changed how I evaluate content in this space, and a look at…