"`எந்த நிகழ்ச்சிக்கும் போறதில்ல‌; தந்த வாக்குக்காக வர்றேன்'னு வந்தார் சாலமன் பாப்பையா"- மதுரை முத்து


மதுரை திருநகரில் இரண்டாவது நூலகத்தைத் திறந்துள்ளார், மதுரை முத்து. தன்னுடைய பூர்வீக கிராமத்தில் ஏற்கெனவே ஒரு நூலகத்தை நடத்தி வரும் நிலையில், இரண்டாவது நூலகத்தை சாலமன் பாப்பையாவை வைத்து திறந்து வைத்திருக்கிறார்.

முத்துவிடம் பேசினோம்.

“‘நான் படிச்சிட்டிருந்த காலத்துல புத்தகம் வாங்க காசும் கிடையாது, ஊர்ல லைப்ரரியும் கிடையாது. மதுரை பொது லைப்ரரிக்கு வந்து நோட்ஸ் எடுத்துட்டுப் போவாங்க. என்னுடைய அண்ணனான பொன் மாணிக்க வேல்லாம் அப்படி படிச்சுதான் போலீஸ் ஆபீஸர் ஆனார். என்னையும் போட்டித் தேர்வுக்குப் படிக்கச் சொன்னாங்க வீட்டுல. ஆனா நம்ம ரூட் மாறிடுச்சு.

டிவிக்கு வந்து நாலு காசு சம்பாதிக்கத் தொடங்கினதுமே நம்மைச் சுத்தியிருக்கிற முடியாதவங்க நாலு பேருக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அரசியல் அது இதுன்னு பெரிய பிளான்லாம் பின்னாடி இல்ல. நம்மால பண்ண முடியும்கிற போது அதைச் செய்யலாமேனுதான்.

மதுரை முத்து

மதுரை முத்து

இந்த ஏரியாவுல போட்டித் தேர்வுக்குப் படிக்கும் மாணவர்கள் அதிகம் இருக்கறதாலதான் படிப்புக்கு முக்கியத்துவம் தர நினைச்சேன்.

கிராமத்துல ஏற்கெனவே திறந்த லைப்ரரியையும் நிறையப் பேர் பயன்படுத்திட்டிருக்காங்க.

இந்தச் சூழல்லதான் திருநகர்ல திரும்பவும் ஒரு லைப்ரரியை, நூலகத்துக்கே உரிய சூழலுடன் தொடங்கியிருக்கோம்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Have Missed

You May Have Missed

You May Have Missed