விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர் திருவிழாவில் 10 டன் எடைகொண்ட தேரினை 400 நபர்கள் தோளில் தூக்கி சுமந்து கிராமத்தை சுற்றும் வினோத நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தோலில் சுமந்து தேர் தூக்கும் திருவிழா
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ளது வீரப்பாண்டி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சித்திரை மாத திருவிழா நடைபெறு வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை மாத திருவிழா கடந்த 14ம் தேதி மாலை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 14 நாட்களாக அருள்மிகு ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மனின் வீதி உலா நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் தூக்கும் திருவிழா நேற்று இரவு தொடங்கி நடைபெற்றது.
10 டன் எடை கொண்ட 31 அடி தேர்
10 டன் எடை கொண்ட 31 அடி தேரினை 400 நபர்கள் தங்களின் தோலில் சுமந்து தேர் தூக்கும் திருவிழாவானது தொடங்கியதில் இரவில் இருந்து இன்று மாலை 6 மணி வரை 5 கிமி கொண்ட வீரப்பாண்டி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மூன்று முறை சுற்றி வந்து மீண்டு ஆலயத்தின் முன் தேர் நிறுத்தப்படும். தேர் முதல் முறை வலம் வரும் போது அதில் அர்ஜூனன், திரௌபதி, மகாவிஷ்ணு ஆகியோரும் இரண்டாம் முறை கிருஷ்ணன், அர்ஜுனனும் மூன்றாம் முறை கிருஷ்ணனும் அலங்கரிக்கப்பட்டு மக்களுக்கு காட்சி அளிப்பர்.
இந்த தேர் தூக்கும் விழாவில் வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள புலிக்கல், ஒட்டம்பட்டு, அருணாபுரம், தேவனூர், நாயனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரெளபதி அம்மனை வழிபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற இந்த விழாவானது மாவட்டத்தில் வேறு எங்கும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண