top news India today abp nadu morning top India news April 26 2024 know full details | Morning Headlines: 88 தொகுதிகள்



தேர்வில் ”ஜெய் ஸ்ரீராம்” என எழுதிய மாணவர்களுக்கு பாஸ் மார்க் – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் அரசு பல்கலைக்கழக தேர்வில், ஜெய் ஸ்ரீராம், பாடல் வரிகள் போன்றவை எழுதப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரில் அரசு நடத்தும் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அந்த பல்கலைக்கழகத்தின் தேர்வில், முதலாம் ஆண்டு மாணவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ மற்றும் கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை விடைத்தாளில் எழுதியுள்ளனர். அதை திருத்திய ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு பாஸ் மார்க்கும் போட்டுள்ளனர். அதோடு,  பாடல்கள், இசை வரிகள் மற்றும் மத வாசகங்களுடன் எழுதப்பட்ட விடைத்தாள்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் படிக்க..

முடிந்தது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, 88 தொகுதிகள் – 61% – மாநில வாரியாக வாக்குப்பதிவு நிலவரம்

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த,  88 தொகுதிகளில் சராசரியாக 61 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதுமுள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து நேற்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் படிக்க..

பிரியா காந்தி தேர்தல் பரப்புரையில் மூவர்ண கொடி தலைகீழாக இருந்ததா? உண்மை என்ன?

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட பொதுத் தேர்தல் ஏப்ரல் 26, 2024 இன்று நடைபெற்றது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த பின்னணியில், பிரியங்கா காந்தியின் தேர்தல் பேரணிக்கு முன்னதாக, பெங்களூருவில் தங்கள் விளம்பர பதாகைகளில் காங்கிரஸ் மூவர்ண கொடியை தலைகீழாக பயன்படுத்தியதாக வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க.. 

சர்ச்சை பரப்புரை? – கோவில்பட்டி காவல் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி மீது புகார்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ராஜஸ்தானில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், தேசத்தின் செல்வத்தை முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்ற அவர் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். மேலும் படிக்க..

ஜனநாயக கடமையில் நாட்டுக்கு முன்னுதாரணமாக திகழும் திரிபுரா.. உ.பி., மகாராஷ்டிரா சொதப்பல்!

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நாடு முழுவதும் இன்று 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க..

மேலும் காண

Source link