தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 7-ஆம் தேதி, கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 8-ஆம் தேதி, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 9-ஆம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 10 மற்றும் 11 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

05.04.2024 முதல் 08.04.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த நான்கு தினங்களில் 2° – 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அடுத்த நான்கு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 39° – 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 37° – 39° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்: அடுத்த நான்கு தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 41.4° செல்சியஸ், சேலத்தியில் 40.6° செல்சியஸ், கரூர் பரமத்தியில் 40.5° செல்சியஸ், திருப்பத்தூரில் 40.2° செல்சியஸ் மற்றும் தருமபுரியில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மதுரை நகரம், திருச்சி, நாமக்கல், வேலூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39° செல்சியஸ் முதல் 40° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது.

கோயம்புத்தூர், மதுரை விமான நிலையம், பாளையம்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் 38° செல்சியஸ் முதல் 39° செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் மற்றும் மீனம்பாக்கத்தில் 38.1° செல்சியஸ் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
que son Los momios en las apuestas (https://Www.beyondthedreamer.com/como-evaluar-tipos-de-apuestas-en-la-nfl/) es under y over en apuestas
paypal online guide To matched betting
Если вам требуется качественный [url=https://remont-dvig124.ru]Капитальный ремонт двигателя цена[/url], обращайтесь к профессионалам. Существует множество причин, по которым двигатель может нуждаться в…
come revocare autoesclusione Feel free to visit my website – giochi online soldi veri senza Registrazione
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

'LED ஸ்க்ரீன், வாட்டர் பாட்டில், ஒரு நாள் அரசு டாக்டர்'- அவையில் எம்.எல்.ஏக்களின் வினோத கோரிக்கைகள்! | ACTPnews.com

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்? | Article on Complaints regarding the Ministry for Natural Resources | ACTPnews.com

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்… அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை! | ACTPnews.com

“லட்சக்கணக்கான மக்கள் தவறு செய்துவிட்டனர்; அது கோடிக்கணக்கான மக்களை..!”- தவெக-வைச் சாடிய ஸ்டாலின் | dmk leader stalin slams tvk | ACTPnews.com

இலவச சிலிண்டர்: “3 சிலிண்டர் தானா? மீதி எப்போது?” – டிடிவி தினகரன் கேள்வி | Free cylinders: “Only 3 cylinders? When will the rest be provided?” – TTV Dhinakaran asks. | ACTPnews.com

no deposit casino bonus codes cashable 2021 usa, united kingdom online casinos and is the palazzo casino open [Trent] online…