தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், பல்வேறு பகுதிகளில் கோடை வெயிலானது வாட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சில நாட்களாக, சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த 15 மாவட்டங்களில் மிதமான இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது எனவும், இதனால் சில இடங்களில் சாலைகள் வழுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் எனவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Published at : 13 Apr 2024 04:33 PM (IST)
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண