தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 விழுக்காடு உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு கூடுதலாக ரூபாய் 2 ஆயிரத்து 888 கோடி செலவாகும். இந்த அகவிலைப்படி உயர்வால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெறவுள்ளனர். ஏற்கனவே அகவிலைப்படி 46 சதவீதமாக இருந்ததை தற்போது தமிழ்நாடு அரசு 50 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தறபோது இந்த அகவிலைப்படி யாருக்கு பொருந்தும் என்பது குறித்து விரிவான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன் வெளியிட்ட அரசாணையில், “தமிழக அரசு பணியாளர்களுக்கு 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 1-1-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அகவிலைப்படியை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து அரசு ஆணையிடுகிறது. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவை தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை, மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும்.

திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடும்போது, 50 காசு அல்லது அதற்கு மேல் இருக்கும்போது அதை ஒரு ரூபாயாக கணக்கிட வேண்டும். இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேர பணியாளர்களுக்கும், சில்லரை செலவு நிதியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

இந்த அகவிலைப்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், ஊதிய அட்டவணையில் உள்ள சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய் துறையில் உள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், எழுத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பொருந்தும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
giochi x vincere soldi Also visit my webpage: prevedere i numeri della roulette
keno android my site casino appli
Virtual Scommesse sinner alcaraz
sikre bettingselskab Have a look at my webpage :: Anbefalede bettingsider (https://181Bet.dev/hvordan-tracker-du-dine-seo-resultater/)
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்? | A West Bengal anomaly: 19,000 teachers working in 4,133 schools that have no students. | ACTPnews.com

சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “நிரூபணமான போலி எண்கவுண்டர்; CBI விசாரணை தேவை” – நயினார் நாகேந்திரன் | Nainar Nagendran has sought a CBI inquiry into the shooting deaths of Tamils in Karnataka. | ACTPnews.com

H-1B விசாவிற்கு சோதனை மேல் சோதனை; மீண்டும் 1 லட்சம் டாலர் கட்டணமா? புது ரூட்டில் ட்ரம்ப் அரசு | ACTPnews.com

Heated Clash in TN Assembly After TVK MLA’s Comment Angers DMK MLAs | ‘தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?’ – அவையில் கடும் அமளி! | ACTPnews.com

“சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை, ஆனால் வருத்தம்.!”- உதயநிதி ஸ்டாலின் பேசியதென்ன? | udhayanidhi stalin speaks about sehar babu and tvk | ACTPnews.com

gioco simile alla briscola Here is my homepage bellagio casinò