Tamil Nadu latest headlines news till afteroon 7th february2024 flash news details here | TN Headlines: ஸ்பெயினிலிருந்து சென்னை திரும்பிய முதல்வர்; கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்



Annamalai: கூட்டணிக்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை – டெல்லியில் அண்ணாமலை பேட்டி..

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைக்க எந்த கட்சியையும் கட்டாயப்படுத்தவில்லை என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அண்ணாமலைக்கு மேலிடத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மேலும் படிக்க

ஆம்னி பேருந்துகள் தாம்பரம், போரூர், சூரப்பட்டில் பயணிகளை இறக்கி ஏற்ற அனுமதி – உயர்நீதி மன்றத்தில் அரசு பதில்

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளை கிளாம்பாக்கம் மட்டும் இல்லாமல், தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பேட்டில் இறக்கி ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

விஜய் தொடங்கிய அரசியல் கட்சி – ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?

ஸ்பெயினில் அரசுமுறை பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நடிகர் விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் வரவேற்பேன் எனத் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜயின் (Vijay) விஜய் மக்கள் இயக்கத்தினை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அரசியல் கட்சியின் பெயரை  அன்றைய தினமே அறிவித்தார் நடிகர் விஜய். மேலும் படிக்க

“பிரதமர் பேச்சை பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்”.. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அப்போது செய்தியாளர்கள் நாடாளுமன்றத்தில் நேற்று மோடி பேசியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடன் கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ”நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடியின் பேச்சை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். எதிர்க்கட்சி தலைவர்போல காங்கிரஸை பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார். மேலும் படிக்க

DMDK Meeting: கூட்டணி குறித்து முடிவெடுக்க பிரேமலதாவிற்கு அதிகாரம்.. தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் முடிவு!

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், தேமுதிகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனை  நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது 10 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் படிக்க

மேலும் காண

Source link