Tamil Nadu latest headlines news till afternoon 18th march 2024 flash news details here | TN Headlines: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்; பிரதமர் மோடி நாளை சேலம் வருகை



Lok Sabha Election 2024: ஒருவழியாக கையெழுத்தானது திமுக – காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு – 9 தொகுதிகள் என்னென்ன?

கூட்டணி கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு இறுதியானதை தொடர்ந்து, திமுக போட்டியிட உள்ள 21 தொகுதிகள் எவை என்பது உறுதியாகியுள்ளது. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், வேலூர், தருமபுரி, ஆரணி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் உறுதியாகி உள்ளது. மேலும் படிக்க

Petition Against TN Governor: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் – தமிழ்நாடு அரசு அதிரடி..

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு எதிரான தண்டனையை நிறுத்தி வைத்து தீர்ப்பளித்த நிலையில், ஆளுநர் ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடிக்கான தண்டனை மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கவில்லை என்பதாலும் பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படிக்க

ADMK – PMK Alliance: இறுதியில் உறுதியான அதிமுக – பாமக கூட்டணி? யாருக்கு எத்தனை தொகுதி?

பாமகவிற்கு 6 மக்களவை தொகுதியும், 1 மாநிலங்களவை தொகுதி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட 6 தொகுதிகள் வட தமிழ்நாட்டிலும், தென் மாவட்டத்தில் ஒரு தொகுதியும் ஒதுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடே மிகவும் எதிர்ப்பார்த்த மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. மேலும் படிக்க

PM Salem Visit: பிரதமர் மோடி நாளை சேலம் வருகை; எதற்கெல்லாம் தடை? – முழு விவரம் இதோ

பிரதமர் மோடி நாளை சேலம் வருவதையொட்டி,  பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மற்றும் சேலம் விமான நிலைய ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதியும் முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இன்று மற்றும் நாளை சேலம் மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனம் பறக்கவும் தடை விதித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார். மேலும் படிக்க


DMK MP Wilson: நீதிமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி – திமுக எம்.பி வில்சன் கடும் கண்டனம்!

தமிழ்நாடு ஆளுநர் மாண்புமிகு ஆர்.என். ரவி அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குச் சிறிதும் மரியாதை அளிக்காமல், மீண்டும் மீண்டும் தவறிழைப்பவராக திமுக எம்.பியும், வழக்கறிஞருமான வில்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசியலமைப்புக்கோ, சட்டங்களுக்கோ, உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கோ துளியும் மதிப்பளிக்காத இந்த ஆளுநர் உடனே பதவிநீக்கம் செய்யப்பட வேண்டும். ஆளுநர் பதவிக்கே இழுக்கான ரவி அவர்களை உடனடியாகத் திரும்பப் பெறுமாறு மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் படிக்க

மேலும் காண

Source link