Tamil Nadu latest headlines news 29th march 2024 flash news details know here | TN Headlines: தமிழ்நாட்டில் இதுவரை நடந்தது என்ன? ஒரு ரவுண்ட் அப்



Lok Sabha Election : களைகட்டும் மக்களவை தேர்தல் – வேட்பாளர்கள் எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா? கட்சிக்கான லிமிட்?

நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் முக்கியப் பொறுப்புகளில், கட்சிகள் மற்றும் தனிப்பட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதும் சேரும். கட்சிகள் எவ்வளவு செலவு செய்யலாம் என்ற வரம்பு இல்லை என்றாலும், வேட்பாளர்களுக்கு அந்த வரம்பு உள்ளது. மேலும் படிக்க

நான் ராமநாதபுரத்த மாலத்தீவாக்குவேன்..உறுதியளித்த ஓ.பி.எஸ்

ராமநாதபுரத்தில் பாஜக கூட்டணி சார்பாக, சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். தலைமையில் ராமநாதபுரத்தில் பாராளுமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின்  நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் படிக்க


CM MK Stalin: ”மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது!” – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சாடல்..

தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டத்துக்கு ஏமாற்றமே பரிசாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டுள்ளார். நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி நமோ செயலி மூலம் பாஜக நிர்வாகிகளுடன் “எனது பூத், வலிமையான பூத்” என்ற தலைப்பின் கீழ் உரையாடினார். அப்போது பிரதமர் மோடி, தாய்மொழியாகத் தமிழ் வாய்க்கவில்லை என வருத்தம் தெரிவித்தார். மேலும் படிக்க

Latest Gold Silver Rate: புதிய உச்சத்தை தொடர்ந்து, சற்றே குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.160 குறைந்தது..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. 50,960 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.20 குறைந்து ரூ.6,370  விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.54,720 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,840 ஆகவும் விற்பனையாகிறது. மேலும் படிக்க

Lok Sabha 2024:வாக்களிக்கும் நாளில் விடுப்புடன் சம்பளமும் வழங்க அரசு உத்தரவு; தகுதியுடையவர்கள் யார்?

இந்திய நாடாளுமன்றத்தின்  18வது மக்களவைக்கான தேர்தல்  ஏழு கட்டங்களாக  நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும், இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. மேலும் படிக்க

மேலும் காண

Source link