Thaipusam 2024 Tomorrow January 25th Devotees Throng Murugan Temple Ahead Thaipoosam Festival
தமிழ் கடவுள் என்று போற்றி வணங்கப்படும் முருகப் பெருமானுக்கு உகந்த நாட்களில் ஒன்று தைப்பூசம். முருகனுக்கு மிக மிக உகந்த நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வணங்கினால் ஏராளமான நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும். நடப்பாண்டிற்கான தைப்பூசம் நாளை கொண்டாப்படுகிறது. நாளை தைப்பூசம்: தை மாதத்தில் பௌர்ணமி திதியில் வரும் பூச நட்சத்திரமே தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு பிறந்தது முதலே தைப்பூச கொண்டாட்டத்திற்கு பக்தர்கள் தயாராகி வந்தனர். முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்று…
