மெக்சிகோவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரில் இருந்து தனியாருக்கு சொந்தமான சிறிய விமானம் ஒன்று, சான் பெட்ரோ டோட்டல்டேபெக் மாவட்டத்தில் உள்ள டொலுகா விமான நிலையத்திற்கு சென்றது.
விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம், அருகில் உள்ள கிடங்கில் விழுந்து வெடித்து தீ பிடித்து சிதறியது.
இந்த விமானத்தில், 10 பேர் வரை பயணித்ததாக தெரிய வந்துள்ளது. 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் உள்ளூர் போலீசாருடன், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டர்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போனில் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. தரையிறங்கும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விழுந்திருக்கலாம் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணங்கள் குறித்து உரிய விசாரணைக்குப்பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

























online sportwetten Visit my web blog basketball wetten handicap