seetha raman zee tamil january 31st today episode written update | Seetha Raman: அர்ச்சனாவை அதிர விட்ட சீதா: சுபாஷூக்கு செக்மேட்


தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பெயிலில் வெளியே வந்த சீதா வீட்டிற்கு ராமுடன் வந்திறங்கிய நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் . 
அதாவது வீட்டில் உள்ள எல்லாரும் சீதாவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்ல தயாராக, வெளியே வரும் அர்ச்சனா, ஆரத்தி தட்டை தள்ளி விட்டு  சீதா உள்ளே வரக் கூடாது, மகாவை கொன்னவளுக்கு இந்த வீட்டில் இடமில்லை” என ஆவேசப்படுகிறாள். “சீதா தான் கொலை செய்தானு நீங்க பார்த்தீங்களா” என உமா கேட்க எல்லாரும் சீதாவுக்கு ஆதராவாக நிற்க, அர்ச்சனா “இவ உள்ள வந்தா நான் வெளியே போய்டுவேன்” என்று சொல்கிறாள். 
சீதா “மகாவை கொன்னவங்கள கண்டுபிடிக்க தான் நான் வந்திருக்கேன்” என்று மரண பயத்தை காட்டுகிறாள். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, அர்ச்சனா “கொன்னுடுவேன்” என்று சொல்ல, சீதா “இன்னொரு கொலையா?” என்று கேட்க, அர்ச்சனாவை திணறி விடுகிறாள். பிறகு சீதா வீட்டுக்குள் வர சுபாஷூம் அவளிடம் வம்பிழுத்து சண்டையிடுகிறான். “சேது அண்ணா கிட்ட சொல்லிடுவேன்” என்று சொல்ல “அப்படியே அந்த 300 கோடி பத்தியும் சேர்த்து சொல்லுங்க” என செக்மேட் வைக்கிறாள் சீதா. 
பிறகு அஞ்சலி, ப்ரியா, காவியா ஆகியோர் சீதாவிடம் வம்பிழுக்க, அவர்களையும் வெளுத்து ஓட விடுகிறாள் சீதா. செல்வி கல்பனா வந்து போன விஷயத்தையும் உங்கள வீட்டுக்குள் விடக் கூடாதுனு சொன்ன விஷயத்தையும் சீதாவிடம் போட்டு உடைக்கிறாள். இப்படியான நிலையில் இன்றைய சீதா ராமன் எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் படிக்க: Amy Jackson: லண்டனில் இருந்து வந்த துரையரம்மா: கோலிவுட்டில் 14 ஆண்டு பயணம்: எமி ஜாக்ஸன் பிறந்தநாள்!
Suriya – Jyothika: உறைபனியில் உருகும் காதல்! பின்லாந்து நாட்டில் சூர்யா – ஜோதிகா: இதயங்களை அள்ளும் வீடியோ!

மேலும் காண

Source link