ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் தனம் அப்பா யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று பேச ஜானகி அதிர்ச்சியான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதாவது ஜானகி “நீ அப்பாவ பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க” என்று தனத்தை திட்டி கோபமாக வெளியே வருகிறார். பிளாஷ் கட்டில் சாரு தனத்திடம் “நீ கொஞ்சம் நடக்கும்போது வீட்டுக்கு தெரியாம வெளியே போய் பேட்மிட்டன் விளையாடிட்டு வந்த விஷயம் எல்லாம் எனக்குத் தெரியும்” என்று நல்லவள் போல் பேசுகிறாள்.

மேலும் ரகுராம் அங்கிள் தான் யாருக்கும் சப்போர்ட் பண்ணுவதில்லை என்று சொல்ல, தனத்திற்கும் அது சரி என தோன்றுவதால் தான் இப்படி பேசினால் என்பது தெரிய வருகிறது.

அதைத்தொடர்ந்து ஜானகி ரூமுக்குள் வர, ரகுராம் “தனம் எவ்வளவு வளர்ந்துட்டா என்பது, அவளை புடவையில் பார்க்கும்போதுதான் தெரிஞ்சது, இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிட்டு நம்மள எல்லாம் விட்டு புகுந்த வீட்டுக்கு போயிட்டு வா” என்று வருத்தப்பட ஜானகி இருவரையும் நினைத்து கவலைப்படுகிறாள்.

அடுத்ததாக மாயா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க அங்கு வரும் சாரு, “நீ தனம் ஜானகி என மூன்று பேரும் சேர்ந்து போட்ட நாடகத்தால் எங்க அப்பா தான் அவமானப்பட்டு ரகுராம் அங்கிள் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியதா போயிடுச்சு. இதுக்கெல்லாம் காரணம் நீதான் உன்னை சும்மா விடமாட்டேன், பழிக்கு பழி தீர்ப்பேன்” எனக் கூறுகிறாள்.

மேலும் ரகுராம் ஜானகியை இந்த ஊர் மக்கள் முன்னாடி அவமானப்பட வைத்து எங்க அப்பா கால்ல விழ வைத்து மன்னிப்பு கேட்க வைப்பேன் என்று முகத்துக்கு நேராக சவால் விட பதிலுக்கு மாயா, “நான் இருக்கிற வரைக்கும் பெரியம்மா, பெரியப்பாவை அவமானப்பட விடமாட்டேன்” என சவால் விடுகிறாள்.

மாயா இந்த விஷயத்தை ஜானகியிடம் சொல்ல முடிவெடுத்து அவளை கூப்பிட்டுச் சொல்ல ஜானகி நம்ப மறுக்கிறாள். இதனால் “அவளோட உண்மை முகத்தை ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன்” என அங்கிருந்து நகர்கிறாள் மாயா. மேலும் ஏற்கனவே சாரு ஜானகியை சந்தித்து மாயா தன்னை தப்பாக புரிந்து கொண்டிருப்பதாக பேசி நல்லவள் வேஷம் போட்ட விஷயங்கள் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் இன்றைய சந்தியா ராகம் சீரியல் எபிசோட் நிறைவடைகிறது.