RR vs RCB Match Highlights: 6வது சதம் விளாசிய பட்லர்; தொடர்ந்து 4வது வெற்றியைப் பதித்த ராஜஸ்தான் ராயல்ஸ்!

நடப்பு ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக விராட் கோலி 72 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் உட்பட 113 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார்.

இலக்கைத் துரத்திய ராஜஸ்தான்

அதன் பின்னர் 184 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் ரன் எடுக்காமல் விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இது பெங்களூரு அணிக்கு மகிழ்ச்சி அளித்தாலும் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

பெங்களூரு அணியின் சுமாரான பவுலிங் மற்றும் சுமாரான ஃபீல்டிங்கினால் ஃபார்ம் அவுட்டில் இருந்த ஜோஸ் பட்லரை ஃபார்ம்க்கு கொண்டு வந்தது. இருவரும் பந்துகளை வீணடிக்காமல் சிறப்பாக விளையாடியது மட்டும் இல்லாமல், தங்களது விக்கெட்டினை இழக்காமலும் ரன்கள் குவித்தனர். பெங்களூரு அணி கிடைத்த கேட்ச் வாய்ப்புகளை மிஸ் செய்தது மட்டும் இல்லாமல், ரன் அவுட் வாய்ப்புகளையும் தவறவிட்டனர்.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

இதனால் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதங்களை பூர்த்தி செய்து சிறப்பாக விளையாடினர். இருவரும் நடப்பு தொடரில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் என்ற சாதனையைப் படைத்தும் விளையாடினர். இறுதில் இவர்கள் பார்ட்னர்ஷிப் 15வது ஓவரில் சிராஜ் பந்தில் பிரிந்தது. இவர்கள் கூட்டணி 86 பந்துகளில் 146 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தது. சிறப்பாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாச முயற்சி செய்து அணியின் ஸ்கோர் 147ஆக இருந்தபோது பிரிந்தது.  சஞ்சு சாம்சன் 42 பந்தில் 8 பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசி 69 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.

பட்லர் சதம்

அதன் பின்னர் வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், துருவ் ஜுரேல் இரண்டு ரன்னிலும் வெளியேறினர். இது பெங்களூரு அணிக்கு விக்கெட் கைப்பற்றிய கணக்கில் மட்டும் சேர்ந்ததே தவிர, ராஜஸ்தானின் வெற்றியில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இறுதியில் ராஜஸ்தான் அணி 19.1ஓவர்களில் 4விக்கெட்டினை இழந்து 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இறுதிவரை களத்தில் இருந்த பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 100 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டி ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரின் 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

Source link