இதுதான் மாற்றமா? “ஜனநாயகன்’னு ஒரு படத்துல நடிச்ச முதலமைச்சர், இப்போ ஜனநாயகத்துக்கு வில்லனா மாறியிருக்காரு. குதிரை பேரம் பேசி இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காரு.
பெரும்பான்மை ஆதரவு இல்லாததால, இந்த ‘ரீல்’ சி.எம் முதல்ல திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுத்து ஆதரவு பெற்றார்.
ஆளுநர் ஆட்சி வரக்கூடாதுன்னு கம்யூனிஸ்டுகளும் ஆதரவு தந்தாங்க. ஆனா, யாரையுமே நம்பாம சோஃபா செட் அனுப்பி அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றார். அது போதாதுன்னு அதிமுகவை உடைச்சு, பல எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ராஜினாமா செய்ய வச்சு, தன் கட்சியில இணைச்சுக்கிட்டு இந்த இடைத்தேர்தலை வரவச்சிருக்காரு.

தமிழ்நாட்டுல இதுவரைக்கும் இப்படி ஒரு இடைத்தேர்தல் வந்திருக்கா? இல்லை. ஆணவத்தின் உச்சத்தில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்துகிற முதலமைச்சர் விஜய்க்கு, தாராபுரம் மக்களாகிய நீங்க கொடுக்கப்போற அடி ஒரு மறக்க முடியாத மரண அடியாக இருக்கணும்.
இல்லைனா, தமிழ்நாடு முழுக்க இதையேதான் வேலையாச் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க, அதை நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க.” எனப் பேசியிருக்கிறார்.

























Reading this prompted me to dig out an old reference book related to the topic, and a stop at purplelinnet…