Phone Tapping: தேர்தல் வியூகத்தை தெரிந்து கொள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுவதாக தமிழக உளவுத்துறை ஐஜி மீது இந்திய தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது.
அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன என பரபர குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. இஸ்ரேலில் இருந்து 40 கோடி ரூபாய்க்கு உளவு மென்பொருள் வாங்கப்பட்டு அதன் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக அதிமுக குற்றச்சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பத்துரை புகார் அளித்துள்ளார். தமிழக உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மீது கடும் நடவடிக்கை எடுக்க இன்பத்துரை தேர்தல் ஆணையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.
மேலும் காண