<p>OPS Symbol: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணைம் அறிவித்தது. அதன்படி, அடுத்த மாதம், 19ஆம் தேதி, முதற்கட்ட தேர்தலில் தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.</p>
<p>தேர்தலுக்கு இன்னும் 19 நாள்களே உள்ள நிலையில், அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் தங்களுக்கான சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றன. </p>
<p>இந்த நிலையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் போட்டியிட உள்ள மன்சூர் அலிகானுக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.</p>