பிரபல நடிகை லட்சுமியுடன் ஏற்பட்ட காதல் குறித்து நடிகர் மோகன் ஷர்மா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ள கருத்துகள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஷாப்பிங்கில் தொடங்கிய காதல் 
அந்த நேர்காணலில் பேசிய மோகன் ஷர்மா, “நாங்கள் முதன்முதலில் சட்டக்காரி என்ற பிரபலமான படத்தில் தான் சந்தித்தோம். அப்போது என்னோட பெற்றோர் மும்பையில் இருந்தார்கள். நான் ஷூட்டிங்கிறாக இங்கு வந்து செல்வேன். அப்படியான நிலையில் நான் மும்பையில் இருந்தபோது ஒருநாள் லட்சுமியிடம் இருந்து போன் வந்தது. மோகன் நான் இங்கே லக்ஸ் சோப் விளம்பரத்துக்காக வந்திருக்கேன். கொஞ்சம் ஷாப்பிங் பண்ண வேண்டியிருக்கு. வர முடியுமா? என கேட்டார்.
நானும் சரி என லட்சுமியை பிக்கப் செய்து பல இடங்களுக்கும் ஷாப்பிங் கூட்டிச் சென்றேன். அங்கே குறிப்பிட்ட ஒரு கடையில் சென்ட் பாட்டிலை பார்த்துக் கொண்டிருந்தார். நான் அங்கே ஒரு பாட்டிலை எடுத்து விலை என்னவென்று கடைக்காரரிடம் கேட்டேன். ரூ.500 என சொன்னதும் வைத்துவிட்டு வந்து விட்டேன். 
ஆனால் அன்றைக்கு எங்கள் பயணம் முடிந்து போகும்போது நான் உங்களுக்கு ஒன்று தர விரும்புகிறேன் என சொல்லி நான் கடையில் வாங்காமல் வைத்து விட்டு வந்த அந்த நாய் வடிவ சென்ட் பாட்டிலை கிஃப்ட் ஆக கொடுத்தார். அதோடு மட்டுமல்லாமல் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு எனவும் சொன்னார். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எனக்கொரு வாய்ப்பு கொடுத்தால் அந்த நாய் மாதிரி இருப்பேன் எனவும் லட்சுமி சொன்னார். எனக்கு ஒரு நிமிடம் உலகமே நின்றது போல இருந்தது. என்ன பதில் கொடுக்க வேண்டும் என தெரியவில்லை. முதல்முறையாக என் வாழ்க்கையில் ஒரு பெண் காதலை சொன்னார் என்றால் அது லட்சுமி தான். 

நான் லட்சுமியின் வார்த்தையை ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொண்டேன். அதனால் ரொம்ப பாதிக்கப்பட்டேன் என சொல்லலாம். இரவெல்லாம் தூங்கவில்லை. மறுநாள் காலையில் போன் பண்ணி உங்களை சந்திக்க வேண்டும் என சொன்னேன். லட்சுமி தன்னோட ஷூட்டிங்கை கேன்சல் செய்தார். நான் இரவெல்லாம் தூங்கவில்லை என நடந்ததை சொன்னேன். பின்னர் லட்சுமி என்னிடம் நாம் திருமணம் செய்துக் கொள்ளலாமா? என கேட்டார். நான், என்னுடைய கேரியரை தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கல்யாணம் பண்ணுவது பற்றி யோசிக்கவில்லை என பதிலளித்தேன்.
லட்சுமி பண்ண எதிர்பாராத செயல் 
ஆனால் லட்சுமி என்னை அவரின் ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றார். அவர் என்னை எதற்கு அழைத்தார் என புரிந்து விட்டது. உடனே நான் லட்சுமியிடம், ‘நான் கண்ணியமான குடும்பத்தில் இருந்து வந்தவன். திருமணம் செய்யாமல் எதுவும் உங்களுடன் நான் செய்ய மாட்டேன். குங்குமம் இருந்தால் கொடுக்க சொல்லி வைத்து விட்டேன். அதுதான் என்னுடைய முதல் அனுபவம். அன்று முதல் இரவில் நாங்கள் கணவன், மனைவியாகி விட்டோம். சென்னை வந்ததும் வழக்கறிஞரிடம் கேட்டு ஊடகங்களில் கல்யாணம் செய்துக் கொண்டதாக அறிவித்து விட்டோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண

Source link


Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed