Oscar Stories 1: 1973-ல் `காட்ஃபாதர்' மார்லன் ப்ராண்டோ ஆஸ்கர் விருதை நிராகரித்த சம்பவம் தெரியுமா? | marlon brando rejected the oscar award in 1973

அதன் பிறகு அந்த மேடையில் பேசிய அவர், “ நான் மார்லன் ப்ராண்டோவை முன்னிலைப்படுத்தி இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். அவர் உங்களிடம் ஒரு நீண்ட உரையை ஆற்றச் சொல்லி என்னை அனுப்பினார். ஆனால், நேரம் காரணமாக இதை பத்திரிகைகாரர்களிடம் ஒப்படைத்துவிடுகிறேன். சினிமாதுறை பூர்வகுடி அமெரிக்கர்களை நடத்தும் விதம்தான் மார்லன் ப்ராண்டோ இந்த விருதை நிராகரிப்பதற்குக் காரணம். எதிர்காலத்தில், நம் இதயங்களும் புரிதல்களும் அன்போடும் பெருந்தன்மையோடும் சந்திக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

Sacheen Littlefeather | Marlon Brando - Oscar Stories 1

Sacheen Littlefeather | Marlon Brando – Oscar Stories 1

இவர் இந்த உரையை முடிப்பதற்குள்ளாகவே அரங்கிலிருந்த பலரும் சச்சீனை நோக்கி எதிர்ப்புக் கூச்சலிட்டிருக்கிறார்கள். மார்லன் ப்ராண்டோ நினைத்து போலவே இச்சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. அப்போது ஹாலிவுட்டில் இச்சம்பவம் பரபரப்பையும் கிளப்பியது. ஆனால், சச்சீனுக்கு இந்த சம்பவம்தான் அவரின் கரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இச்சம்பவத்திற்குப் பிறகு அவரை ஹாலிவுட் ஓரங்கட்டி ப்ளாக்லிஸ்ட் செய்தது.

– கதைகள் தொடரும்

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed