விழுப்புரம்: யார் காலையும் புடிச்சி தவழ்ந்து சென்று தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் ஆகவில்லை, மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வராகியிருப்பதாகவும் பாலம் தாங்கி எடப்பாடி பழனிசாமி போன்று இல்லை என்றும் ஆளுநர் ரவி, அவர் ஆளுநர் இல்லை சங்கி என்றும் அவர் தபால்காரர் ஆக ஒன்றிய அரசுக்கு செயல்பட வேண்டும் அதனை செய்யவில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி திமுக கூட்டணியிலுள்ள விசிக வேட்பாளர் துரை ரவிக்குமாரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி அரசியல் வழிகாட்டியான ரவிக்குமாருக்கு பானை சின்னத்தில் வாக்களிக்க கேட்டு வந்துள்ளதாகவும், இது பிரச்சார கூட்டமா, பொதுகூட்டமா வெற்றி விழா கூட்டம் போன்று உள்ளதாகவும் சொல்வதை செய்வோம்! செய்வதை தான் சொல்வோம்! என்ற கருணாநிதியின் வழியில் வந்த ஸ்டாலின் அதனை செய்து வருவதாகவும், யார் காலையும் பிடிச்சி தவழ்ந்து சென்று முதலமைச்சராக ஸ்டாலின் முதல்வராக ஆகவில்லை மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வராகியிருக்கிறார்.
பாலம் தாங்கி எடப்பாடி பழனிசாமி போன்று இல்லை என உதயநிதி காட்டமாக கூறினார். மோடி கொரனோ காலகட்டத்தில் வாயிலில் விளக்கு ஏற்றுங்கள் என கூறினார். அதன் பேரில் நிறைய பேர் அதனை செய்தார் அது மட்டுமே மோடி செய்துள்ளதாகவும், கொரனோ கால கட்டத்தில் தைரியமாக கொரனோ ஊசியை போட்டுக்கொண்டு மருத்துவமனையில் ஆய்வு செய்தவர் தான் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் ஒரு அரசு ஒரு திட்டத்தினை கொண்டு வந்தால் மக்கள் எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்களோ அப்பொழுது தான் அத்திட்டம் வெற்றி பெறுவதாகவும், அப்படி தான் மகளிர் இலவச பேருந்து பயணத்தை பயன்படுத்தியுள்ளார்கள் என பெருமிதமாக தெரிவித்தார்.
புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகள் 3 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாகவும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத திட்டமாக கல்லூரி மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் கொடுக்கும் திட்டத்தினை கொண்டு வந்துள்ளதாகவும், திராவிட மாடல் அரசு கொண்டு வரும் திட்டங்கள் ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்கள் எடுத்து செல்வதாகவும் காலை உணவு திட்டம் மாணவர்கள் கல்வி பயில பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்தார். தகுதிவாய்ந்த உறுதி செய்யப்பட்ட மகளிருக்கு மகளிர் உரிமை தொகை அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் மோடி பத்து வருடங்கள் ஆட்சி செய்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கல்நட்டுவிட்டு மோடியும், பாலம் தாங்கி பழனிசாமியும் சென்றுவிட்டதாக கூறினார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட ஒரு கல்லை நானே பிடிங்கிவிட்டு வந்துவிட்டேன் இப்போ அந்த கல்லை அவர்கள் தேடி கொண்டு இருப்பதாகவும், நான் கல்லை காட்டினால் எடப்பாடி பழனிசாமி பல்லை காட்டுகிறார். ஒன்றிய பிரதமரை சந்திக்கிறது கேவலமான விஷயமாகி உள்ளது. முதல் முறை பிரதமரை சந்திக்கும் போது நீட் விலக்கு கோரி கேட்டதாகவும், இரண்டாவது முறையாக சென்றபோது மழை பாதிப்பு நிவாரண நிதி அளிக்க வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.
மோடியை 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும், ஒரு ரூபாய் ஜி எஸ் டி வரி கட்டினால் ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 29 பைசா கொடுக்கிறது. மற்ற மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் உடனே நிவாரணம் கொடுக்கிறார்கள் ஆனால் தமிழகத்திற்கு கொடுக்க மறுக்கிறார்கள் என தெரிவித்தார்.
ஆளுநர் ரவி அவர் ஆளுநர் இல்லை சங்கி என்றும் அவர் தபால்காரர் ஆக ஒன்றிய அரசுக்கு செயல்பட வேண்டும் அதனை அவர் செய்யவில்லை என்றும் சட்டமன்றத்திற்குள் ஆளுநர் வருவதும் போவதும் தெரியாது உச்ச நீதிமன்றம் ஆளுநர் ரவியை கண்டிச்சது போன்று யாரையும் கண்டித்தது கிடையாது.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எல்லாரையும் வருமான வரி துறை அமலாக்க துறையை வைத்து பயம்புறுத்தி வைத்திருந்தார்கள், அவர்கள் போன்று நாங்கள் பயப்படுபவர்கள் இல்லை என தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி பதவியேற்பு விழாவில் சங்கி கூட்டத்தினை காலி செய்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வதாக ஆளுநர் ரவியிடம் கூறிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு சென்றதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
மேலும் காண