காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் இ ராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாஜக தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை என்றும் கச்சா எண்ணெய் குறைந்த பொழுதிலும் பெட்ரோல் விலையை பாஜக குறைக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு வைத்தார்.
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அதேபோன்று தலைவர்களும் தினமும் ஒவ்வொரு தொகுதிக்கு சென்று பிரச்சாரங்களை மேற்கொண்டு அந்த வகையில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் இராஜசேகரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, காஞ்சிபுரம் தேரடி பகுதியில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதனை அடுத்து தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது :
நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை வருகின்ற பொழுது நாட்டு மக்களுக்கு நன்மை கிடைக்கும். பேரறிஞர் அண்ணா சொன்ன ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம். அது நிறைவேற்ற பாடுபட்டுக் கொண்டிருக்கிறது அதிமுக. அண்ணா திமுக மூன்றாக போய்விட்டது நான்காக போய்விட்டது என ஸ்டாலின் பேசுகிறார்கள். அண்ணா பிறந்த மண் அண்ணா கனவை நினைவாக்கும் கட்சி அதிமுக.
காஞ்சிபுரம் இன்று குலுங்குகிறது. அண்ணாவின் கனவை நிறைவேற்றுவோம் அதுதான் என்னுடைய கொள்கை மற்றும் லட்சியம். நெசவாளர்களுக்கு எதுவும் செய்யாத அரசு மத்திய அரசு. நெசவாளர்களுக்கு எந்த வித நன்மையும் இல்லாத பாஜக தேர்தல் அறிக்கை. திமுக ஆட்சி வந்தாலே மின் விலை உயர்ந்துவிடும், கோடை காலங்களில் மின் விட்டு அதிகரிக்கும். திமுக ஆட்சி வந்த நாள் இருந்து விலைவாசி உயர்வு அதிகரித்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் இருக்கு, எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடைபெறுகிறது.
அதைவிட எங்கும் வேண்டுமானாலும் கிடைக்கும் அளவிற்கு போதை பொருள் விற்பனை அமோகம், இதனை இந்த திமுக ஆட்சி கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதிமுக ஆட்சியில் தான் பல்வேறு துறையில் தமிழகம் தேசிய அளவில் பல விருதுகள் வாங்கியுள்ளோம். கண்ணுக்கு தெரியாத காற்றில் 2g 1லட்சம் கோடி ஊழல் செய்த கட்சி திமுக. திமுகவில் 30 ஆயிரம் கோடி விவகாரம் ஸ்டாலின் மருமகன் சபரிசன் அமைச்சர் பழனிவேலிடம் கேட்பதாக ஆடியோ வெளிட்டதில் இதுவரை ஸ்டாலின் இடம் பதில் இல்லை.
இஸ்ரேல் போர் விவகாரத்தில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வழங்கப்படுகிறது, ஆனால் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கமால் அதிகரித்து வருகிறது. மாநில அரசு பெட்ரோல் டீசல் விலை குறைபதாக தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், sஅரசு குறைக்கவில்லை. பெட்ரோல் டீசல் விலையால் அத்தியாவசிய பொருட்கள் உயர்ந்து வருவதால் இதனை மத்திய மாநில அரசு கருத்தில் கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருவதால் ,மத்திய, மாநில அரசு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்
மேலும் காண