விழுப்புரம்: காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து மாநிலங்களுக்கான அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு ஒரு நகராட்சிக்கு இருக்கிற அதிகாரம் கூட இன்று மாநிலங்களுக்கு இல்லை. மாநிலங்களுக்கு அதிகமான அதிகாரம் வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள 22 தேசிய மொழிகளும் அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாகவும், பயிற்சி மொழியாகவும் மாற வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெற்ற பாமக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேச்சு.
பாமக வேட்பாளர் அறிமுக கூட்டம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் முரளி சங்கர் அறிமுக கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
மருத்துவர் ராமதாஸ் பேச்சு
”இன்றைக்கு உள்ள சூழலில் தனியாக போட்டியிட முடியவில்லை. அதனால் தான் கூட்டணி அமைத்துள்ளோம். வலிமையான கூட்டணி அமைத்துள்ளோம். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் மோடி ஆட்சிக்கு வரவுள்ளார். விழுப்புரம் வேட்பாளர் முரளி சங்கர் நன்கு படித்தவர். கால்பந்தாட்ட வீரர், எல்லோருக்கும் பயிற்சி கொடுப்பபவர். மேலும் ஆறு மொழிகளில் பேசக்கூடியவர். குறிப்பாக வேட்பாளரின் ஒழுக்க மிக மிக முக்கியம். நம்முடைய வேட்பாளருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. மக்களுக்கு சேவை செய்வது தான் அவரின் நோக்கம். அதே போல் தான் கூட்டணி கட்சிகளின் நோக்கமும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடி வருகிறோம்.
அனைவருக்குமான சமூகநீதி
தமிழ்நாட்டில் 370 சமுதாயங்கள் உள்ளன. பல அடுக்குகளில் அவரின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் சமூக நீதி இல்லாத நிலை உள்ளது. விழுப்புரம் கல்வியில் கடைசி மாவட்டம். குடிசைகள் அதிகம் உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். பொருளாராத்தில் கடைசியாக உள்ள மாவட்டம் விழுப்புரம் மாவட்டம். இப்படியே இந்த மாவட்டம் இருக்கக்கூடாது அதற்கான திட்டங்கள் என்ன என்பது கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்ல இருக்கிறோம். சமூகநீதி என்றால் எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். சிலர் உயரவும், சிலர் அதே இடத்தில் இருக்கவும், சிலர் கீழே போகவும் சம நிலை அற்ற சமுதாயம். சுதந்திரம் பெற்று 75ஆண்டுகள் ஆகிறது இந்த வேற்றுமை இருக்கலாமா.
இதுகுறித்து முரளி சங்கர் நாடாளுமன்றத்தில் பேசுவார். மாநில அதிகாரங்கள் எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்து மத்தியில் எடுத்துக்கொள்கிறார்கள். மாநிலத்திற்கு நகராட்சிக்கு உள்ள அதிகாரம் கூட இல்லை. பிறகு எங்கே வளர்ச்சி. பிறகு எப்படி தரமான கல்வி கொடுப்பது. எல்லோருக்கும் சமமான, சுகமான, தரமான கல்வி எப்போது கிடைக்கு. அம்பானி குழைந்தைக்கு கிடைக்கும் கல்வி சாமானிய மக்களுக்கும் கிடைக்க வேண்டும். மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும். 22 தேசிய மொழிகள் அந்தந்த மாநிலத்தில் ஆட்சி மொழியாக, பயிற்சி மொழியாக மாற வேண்டும். இன்றைக்கு கரும்புக்கும், நெல்லுக்கும் விலையில்லை. விவசாயம் செழிக்க வேண்டும்.
இளைஞர்கள் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கக்கூடாது. படித்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். விவசாய மேம்பாட்டிற்கு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளளேம். நமது வேட்பாளர் முரளி சங்கர் நாடாளுமன்றத்தில் பேசவில்லை என்றால் அவருக்கு நானே தண்டனை கொடுப்பேன். கூப்பிட்டு கண்டிப்பேன். நமது நாடு மேம்பட வேண்டும் என்றால் சம நிலையில் உள்ள சமுதாயம் அமைய வேண்டும். பட்டியலின வேட்பாளர். நாம் பட்டியலின மக்களுக்காக பாடுபட்டுள்ளோம் என்றால் நிறைய பேசலாம். பட்டியலின மக்களுக்காக அவர்களின் வாழ்வாதாரத்திற்காக பாடுபட பாம்பழம் சின்னத்தில் வாக்களித்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வேண்டும்.
மோடி நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளார். தன்னாட்சி முக்கியம், மாநில அதிகாரம் முக்கியம். மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இதுவரை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று டெல்லி சென்றுள்ளனர். அவர்களைவிட முரளி சங்கர் பல்வேறு விதமான மக்கள் பிரச்சினைகளுக்கு பாடுகிறார் என்ற நிலையில் செயல்படுவார் என உறுதியளிக்கிறேன். அனைத்து ஊர்களுக்கும் சென்று மோடி பற்றியும், வேட்பாளர் பற்றி சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.