18வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய தலைமை அலுவலகத்தில், தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில், புதியதாக தேர்தல் ஆணையர்களாக பதவியேற்ற சுக்பிர் சிங் சந்து மற்றும் க்யானேஷ் குமார் கூட்டாக அறிவித்து வருகின்றனர்.

96.88 கோடி வாக்காளர்கள்:

இதில், எத்தனை கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும், வேட்புமனுதாக்கல், வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையர் அறிவித்து வருகிறார். இந்த அறிவிப்பில், மக்களை தேர்தல் எத்தனை வாக்களார்கள் உள்ளனர் என்றும் வாக்காளர்கள் வாக்களிக்க என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்தார்.

அதன்படி, "நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வரும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். கடந்த மக்களவை தேர்தலைவிட வரும் தேர்தலில் 6 சதவீதம் வாக்களார்கள் அதிகம் உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்களார்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர்.

ஏப்ரல் 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வரும் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள். 1.82 கோடி வாக்காளர்கள் முதல்முறை வாக்களிக்க உள்ளனர். 20 முதல் 29 வயதுடைய வாக்காளர்கள் 19.47 கோடி பேர் உள்ளனர்.100 வயதை கடந்த 2.18 லட்சம் பேர் மக்களவை தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்" என்றார்.

"வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்"

இதனைத் தொடர்ந்து, "வாக்காளர்கள் வாக்களிக்க 10.5 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். 55 லட்சம் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. 1.50 கோடி தேர்தல் பணியாளர்கள் இந்திய முழுவதும் பணியாற்ற உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் அவர்கள் விரும்பும் பட்சத்தில் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Delhi: Chief Election Commissioner Rajiv Kumar says, "We have 1.8 crore first-time voters and 19.47 crore voters between the age group of 20-29 years…" pic.twitter.com/2BFDRVtIQw

— ANI (@ANI) March 16, 2024

85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 40% பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 82 லட்சம் மாற்றுத்திறனாளிகள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். 82 லட்சத்திற்கும் மேற்பட்ட 85 வயதை நிரம்பியவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்” என்றார்.

இதையெல்லாம் செய்யக்கூடாது:

"சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் செய்யலாம் ஆனால் போலி செய்திகளை பரப்பக்கூடாது. மத ரீதியாகவோ தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தோ பிரச்சாரம் செய்யக்கூடாது. குழந்தைகளையும் மாற்றுத்திறனாளிகளையும் பிரச்சாரத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுகின்றது. தன்னார்வலர்கள், ஒப்பந்த பணியாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது. அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்குவதில் எந்த பாரபட்சமும் கூடாது"
என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.