அரசு மருத்துவமனைகளின் அவலம்:சட்டசபையில் அமைச்சரை அலற விட்ட ஆளும்கட்சி பெண் எம்எல்ஏ - Kumudam

பீகார் மாநிலத்தின் அலிநகர் தொகுதியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிரபல நாட்டுப்புறப் பாடகி மைத்லி தாக்கூர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆர்ஜேடி வேட்பாளரை 11,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்எல்ஏ ஆனார்.. 25 வயதே ஆன இவர், பீகார் சட்டப்பேரவையின் மிக இளவயது எம்எல்ஏ ஆவார்.

நாட்டுப்புறப் பாடகியான  இவர், அரசியலில் நுழைந்த குறுகிய காலத்திலேயே தனது தொகுதி மக்களின் நலனுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நேற்று பீகார் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அவருக்கு பேச வாய்ப்பு கிடைத்தது. அப்போது  தனது சொந்த தொகுதி மருத்துவமனைகளின் அவல நிலை குறித்து மைத்லி தாக்கூர் காரசாரமாகக் கேள்வி எழுப்பினார். 

‘அலிநகர் தொகுதி அரசு மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது; மேற்கூரை பிளாஸ்டர்கள் பெயர்ந்து விழுவதுடன், மழைக் காலங்களில் தண்ணீர் கசிந்து நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழல் நிலவுகிறது’ என்று என சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். 

இதற்குப் பதிலளித்த (பொறுப்பு)அமைச்சர் பிரமோத் சந்திரவன்ஷி, ‘விரைவில் 12 ஆயிரம்  மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்’ என பதிலளித்தார். அப்போது குறுக்கிட்டு பேசி பெண் எம்எல்ஏ, ‘அமைச்சரின் பதிலில் எனக்குத் திருப்தி இல்லை’ என்று சபையிலேயே ஆவேசமாகத் கூறினார்.

‘பல ஆண்டுகளாகச் சீரமைப்புப் பட்டியலில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை’ .‘சுகாதாரத் துறை அமைச்சர் மங்கல் பாண்டே நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தினார். ஆளும்கட்சி எம்எல்ஏவின் பேச்சுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையைத் தட்டி மைத்லி தாக்கூருக்குத் தங்களது பலத்த ஆதரவைத் தெரிவித்தனர்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed