Lok sabha Election: மொத்தம் 834 பேர்


Lok sabha Election: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது.
வேட்புமனுத்தாக்கல் நிறைவு:
5 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 1000க்கும் மேற்பட்டோர், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போடிட்யிட வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் இதற்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது.
இதற்கான அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவுற்ற நிலையில், அதற்கு முன்னதாக தேர்தல் அதிகாரிகள் அலுவலகங்களுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளன. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் 3 மணிக்கு பிறகு வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
இறுதி வேட்பாளர் பட்டியல்:
மனுதாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிந்ததைத் தொடர்ந்து,  மார்ச் 28ம் ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு  வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
சரிபார்த்தலின் போது விண்ணப்பங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாவிட்டாலும், உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்கள் சமர்க்கப்படவிட்டாலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படும்.  வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாளாகும். அதைதொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 
விறுவிறுப்பான வேட்புமனுத்தாக்கல்:
வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 20ம் தேதியே தொடங்கினாலும், முதல் நான்கு நாட்கள் மந்தகதியிலேயே வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது. முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே, கவனம் ஈர்க்கும் வகையில் பல்வேறு நூதன முறையில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமையில் இருந்து தான், திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் தலைமையிலான கூட்டணிகளில் உள்ள பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
நட்சத்திர வேட்பாளர்கள்:
தென்சென்னை தொகுதியானது சிட்டிங் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் ஆகியோர் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. இதேபோன்று கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தூத்துகுடி தொகுதியில் கனிமொழி, வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி, மத்திய சென்னை தொகுதியில் தயாநிதிமாறன் போட்டியிடுகின்றனர்.  கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்தும், பாஜக சார்பில் பொன். ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.
திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் செந்தில், ராமநாதபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேனி தொகுதியில் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதன் மூலம் இந்த தொகுதிகள் கவனம் ஈர்த்துள்ளன.

மேலும் காண

Source link