<p style="text-align: justify;">நடிகையும் பாரதிய ஜனதா கட்சி பிரமுகருமான குஷ்பு நடப்பு மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறு பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.&nbsp;</p>
<p style="text-align: justify;">அதில், &rdquo;எலும்பு முறிவு காரணமாக ஏற்கனவே சிகிச்சை மேற்கொண்டு இருந்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பிரச்னையுடன் இருந்து வருகின்றேன். இந்நிலையில் எனது மருத்துவர்கள் எனது உடல் நிலையை மனதில் கொண்டு, பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம் என அறிவுருத்தியுள்ளனர். எலும்பு முறிவு பிரச்னையால் என்னால் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர முடியாத நிலையும், நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு என்னால் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான என்னை மன்னிக்கவேண்டும். பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாதது மிகவும் மனவருத்தத்தை அளிக்கின்றது.&nbsp;</p>
<p style="text-align: justify;">தற்போது உள்ள பிரச்னை உயிருக்கு ஆபத்தான நிலை இல்லை என்றாலும், மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொள்ள அறிவுருத்தியதால் என்னால் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளேன்&rdquo; இவ்வாறு குஷ்பு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.&nbsp;</p>

Source link


Latest News

View All

  1. Помощь можно получить анонимно, с аккуратным оформлением и внимательным отношением к личным данным. Узнать больше – [url=https://vyvod-iz-zapoya-balashiha15.ru/]вывод из алкогольного запоя[/url]

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed

You May Have Missed

You May Have Missed